மனிதன் வாழும் வரை
மனிதன் வாழும் வரை ,,
நினைப்பதில்லை..
வெண்மையின் நிழலை....
மரணமடைந்த பின்பு
கருப்பு கொடிகளை காணிக்கையாக்கி
அவர் பெருமை கூறுகிறோம் ...
இருக்கும் போது அவர்
அருமை தெரிவதில்லை
நமக்கு
இரங்கல் கூட்டங்கள்
அவருக்கு ...
வாழும் போது
வாடகை வீடு
குருவிக் கூட்டைப்போல....
இறந்த பிறகு
மாட மாளிகை போல
நினைவாலயம் ..
உயிரோடு இருக்கும் போது
அன்பு சோறு போடாத
சிலர்
செத்த பிறகு
அம்பு,வானவேடிக்கை
மலர் அலங்காரங்கள்,படையல்கள்
பெற்றோருக்கு ...
நம் வீட்டு வாசலில்
அரு நிழலையும் குளிர்ந்த காற்றையும்
தரும் புனித மரத்தை
நாம் ரசிப்பதில்லை ...
பச்சை கிளிகள் ,பேசும் மைனாக்கள்
வாழும் பச்சை தாவணிப் பெண்கள்
நிலையை நாம்
அறிவதில்லை ...
புயல்,மழையால்
இறந்த பின்பு
அதன் அருமை
உணர்கிறோம் ...
நாம் தேடுகிறோம்
தொலைந்த சுகத்தை
எந்நாளும்...
பார்வை இருக்கும் வரை
கருவிழிகளின் அருமையும்
கொடை கைகளிருக்கும் வரை
அதன் பயன்பாடும்
தெரிவதில்லை
நமக்கு ....!