[382] இயேசுவைப் பாடு எம்பாவாய்..!....(5)

[[10 பாடல்கள் கொண்ட பதிகத்தின் 5-ஆவது பாடல்]

தன்னை நினைத்தும் தனக்காக வேவாழ்ந்தும்
என்ன கிடைத்தும் எதற்குமே நன்றிசொலார்
என்னே பிறவி எடுத்திட்டோம்? ஏன்வாழ்வோம்?
என்றெ சலிப்பில் இயலாமல் கைகூப்பி
முன்வந்து அழுது முகம்பார்க்க, எங்கேயோ
மின்ன வரும்,ஒளியின் மேலாய் விரைந்துவந்து
அன்னை தனிற்பரிந்து அன்பால் உதவிடுவான்
என்னேசு வின்கருணை ஏத்தியே,பா டெம்பாவாய்!
========================பொருளுரை:
தன்னையே நினைத்தவராகத் தனக்காகவே வாழ்பவராக இருப்பவர்கள் எது கிடைத்தாலும் அதில் மனநிறைவு கொள்ளாமல், என்ன பிறவி எடுத்து வந்துள்ளோம், ஏன் இன்னும் வாழுகின்றோம் அன்றெல்லாம் சலிப்படைந்தவராகப் பிறப்பின் பலனை உணர்ந்தறிய முடியாதவர்களாகக் கடைசியாகக் கைகூப்பியபடி, முன்னால் வந்து நின்று அழுதவர்களாக நமது இயேசுவின் முகம் பார்த்து வேண்டி நிற்பார்கள்! அப்பொழுது அவர்களுக்கு, எங்கேயோ மின்னுவதால் ஏற்படுகின்ற ஒளியானது நமக்கு முன்னே விரைவாக வந்து காணக் கிடைப்பதைப் போலவும், அதனைவிடவும் விரைவாகவும் நமது இயேசு வந்து, தாயைக் காட்டிலும் அதிகமான அன்பையும் பரிவினையும் காட்டி, உதவிசெய்வார்; அந்தக் கருணையினைப் புகழ்ந்து உயர்த்திப் பாடிட எழுந்து வருவாயாக!
=================== தொடரும்..

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (20-Dec-12, 7:12 am)
பார்வை : 119

மேலே