ஆசைகள்

எல்லைகளே இல்லாமல்
நீட்டிக்கொண்டிருக்கிறாய் ஆசைகளை நீ !

எதை அடைந்தும் திருப்பதி இல்லாமல்
தேடிக்கொண்டிருக்கிறாய் எதை எதையோ !

நீ சாலையில் கிடந்தது போது
உட்காருவதர்க்கும் உறங்குவதற்கும்
ஒரு சிறு கூரைவீடு பெரிதெனப்படது,
கூரை வீடு கிடைத்ததும் மாடி வீடு பெரிதாய்,
மாடிவீடு கிடைத்தும் மனம் நில்லாமல்
அலைந்து கொண்டிருக்கிறது மாளிகையை தேடி!

கருவறையில் தொடங்கி
கல்லறை வரை நில்லாமல் நிற்கிறது
உன் ஆசைகளின் பயணம்,
ஆம் ,
உன் கடைசி ஆசையை கல்லறையில்
பொரித்து வைத்து காட்டுகிறது கல்வெட்டு!

அடையமுடியாத ஆசைகளால்
அழிந்தபின்பும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள் ஆவிகளாய்!

போதுமென்ற மனம் கொண்டார் பூமியில் இல்லை
ஆசைகளும் எதிர்பார்ப்புகளும்
இருக்கும் மனிதர்களுக்கு தோல்விகள்
என்றும் நிரந்தரமே!

"பால் "போன்ற மனித வாழ்க்கையில்
"விஷமென்ற ஆசை "கலந்துவிட்டால்
முறிந்து போவது "அன்பும் நிம்மதியுமே" !

வாழ்க்கையில் ஒன்றில் மட்டும் நோக்கம் "லட்சியம் ,
ஒவ்வொன்றிலும் நோக்கம் "ஆசை"!

போதுமென்ற மனம் கொள்ளுவோம்
புன்சிரிப்போடு வாழ்ந்திருப்போம்
ஆசைகளை தீர்ப்பதற்கு வழியுண்டு
பேராசைகளை தீர்க்க.......................?

எழுதியவர் : வினாயகமுருகன் (20-Dec-12, 10:28 am)
பார்வை : 346

மேலே