சுகம்
வெயிலிலே அலைந்து திரிந்து
நிழலை தேடு
ஒற்றை மரத்தின் ஓரத்தில்
நின்னு பாரு
அதிலே கிடைக்கும் சுகம் பாரு
இதற்கு ஈடு இணை ஏது
தாகத்தோடு அலைந்து திரிந்து
தண்ணீர் கொஞ்சம் இருந்து
அதை நீ பருகி பாரு
அதிலே கிடைக்கும் சுகம் பாரு
இதற்கு ஈடு இணை ஏது
பசியோடு இருந்து பழைய சோறு
கொஞ்சம் இருந்து
நீ சாப்பிட்டு பாரு
அதிலே கிடைக்கும் சுகம் பாரு
இதற்கு ஈடு இணை ஏது
ஓயாத உழைப்புக்கிடையே
கொஞ்சநேரம் ஓய்வு கிடச்சா
ஓய்வு எடுத்து பாரு
அதிலே கிடைக்கும் சுகம் பாரு
இதற்கு ஈடு இணை ஏது
உறக்கம் இன்றி இருந்து நீ உறங்கிபாரு
அதிலே கிடைக்கும் சுகம் பாரு
இதற்கு ஈடு இணை ஏது
செய்கின்ற காரியத்தில் தன்னை
முழுதாய் ஈடுபடுத்தி பாரு
அதிலே கிடைக்கும் சுகம் பாரு
இதற்கு ஈடு இணை ஏது
- கோவை உதயன் -