புனிதப் பயணம்

வாழ்க்கை
வாழ்வதற்கே!

வழக்கை போல
வாதம் பண்ண ...
புயலைப் போல
சண்டை போட...
எத்தனிக்கிறது
தினந்தோறும் ...!

தொடரும்
வாழ்க்கையில்
பாதாளம் எது ?
தேவலோகம் எது ?
என்ற கேள்வியே !

தோன்றிய பின்
உயிர்ப்பித்து
மண்ணாகி
புழுவாகி
புதைந்த பின்னே
விதையாக ...!

மாய வடிவில்
சூறையாடிய
புனிதம்
மீண்டும்
மலராதோ ...!

மீண்டும்
ஜனிக்க ...!
மண்ணில் விழும்
மழைத் துளி போல்
வாசம்
வீசாதோ ...!

அகிலம்
முடியும் முன்
புனிதப் பயணம்
தொடரட்டும்
இனிதாக ...!

எழுதியவர் : செயா ரெத்தினம் (21-Dec-12, 2:55 am)
பார்வை : 95

மேலே