அவளின் நினைவுகள்

திண்ணை ஓரமாய்
படுத்துருக்கும் என்
நினைவுகளை
எங்கோ கூட்டி
செல்கிறாள்..

திரும்பி வரும் வரை
காத்துருக்கிறேன்
கண்ணீருடன்...

அவளில் நினைவுகள்
தரும் வலியை
விட
கொடிய வியாதி
எது...?

தூக்கம் மறந்த
என்னிடம்
தூக்க மாத்திரைகள்
தோற்று போயின...

வலியை எனக்கு
தந்து
ஒளியாய் வாழ்க்கை
அமைத்து கொண்டாய்
நீ...

அவளில் நினைவுகள்
தரும் வலியை
விட
கொடிய வியாதி
எது...???

எழுதியவர் : சிவானந்தம் (21-Dec-12, 9:00 am)
சேர்த்தது : சிவானந்தம்
Tanglish : avalin ninaivukal
பார்வை : 323

மேலே