அன்பு சகோதரிக்கு..
இந்த சமுதாயம்,
எனக்கு சம்மதமில்லை!!...
கணவனை இழந்தவள் கைம்பெண்...,
மனைவி இழந்தவன் மாப்பிள்ளை!!...
பிள்ளை பெற மட்டும் கல்யாணம்...
பிள்ளைகள் செய்யும் தவறுக்கு,
பெற்றவர் பெரும் அவமானம்!
கொலைகார கணவன் தூக்கில் இடப்பட
மனைவி செய்த குற்றம் என்ன?...
அவனுக்கு அதோடு சரி...,
அவளுக்கு?!.....?!
கவலை வேண்டாம் சகோதரி...
பட்டம் தருகிற முட்டாள் கூட்டம்
இன்று நேற்று தோன்றியதல்ல!
இவர்கள் தூதர்களையே
பைத்தியம் என்று பறை சாற்றியவர்கள்!...
இறைவன் தருவான் என்பதில் மட்டும்
இம்மி யளவும் ஐயம் வேண்டாம்..
பெறுபவருக்கு ஐந்தோ அல்லது ஆறோ தான்...
அன்போடு வாழ்பவர்க்கோ
ஆயிரம் ஆயிரம் குழந்தைகள்...
உங்கள் கண்ணீரை ஒழித்தே வைத்திருங்கள்!..
அது உலகையே ஒரு நாள் மூழ்கடித்து விடக் கூடும் ....