என்ன காதல் இது?
என்ன பிடிக்கும் என்று
என்னிடம்
கேட்டுக் கொண்டே இருக்கிறாய்
நானும் பதில் சொல்வதாயில்லை
இது தொடர் கதையாகிறது
நான் வாங்கித் தருவதை
பெற்றுக் கொள்ள
விருப்பமில்லையா எனவும்
ஒருவேளை
என்னையே பிடிக்கவில்லையா எனவும்
வெறுப்புப் பார்வையில்
அமிலத்தை பொழிகிறாய்
அப்படியும்
நான் பொறுமை காப்பதை
சகிக்க முடியாத நீ
சபித்தும் போகிறாய்
இதயமற்ற ஜென்மம் என்று
என்னவளே
உனக்கு பிடித்தது எதுவும்
எனக்கும் பிடிக்கும் என்று
என்று புரிவாய்
நீ !