பைத்தியக்கார மொழி!
அடர்த்தியான இரவில்
அடர்த்தியான மர நிழல்
என்ன பயன்?! ....
இறுகத் தழுவியும்
இம்மியும் சத்தமில்லை;
தலையணை...
அழித்துத் திருத்த நட்பு
எழுத்துப் பிழையல்ல;
கல்வெட்டு!!
மறந்திருந்த ஊருக்கு
மறுபடி அறிமுகம் செய்தது
அவன் பணம்!!
விபச்சாரிக்கு உடல்,
போராளிக்கு உயிர்,
முதலீடுகள்...
எப்போதாவது வருகிறது
ஏழைக்கு மகிழ்ச்சி;
ஏமாற்றம் போலன்றி...
தேடிய அவசரத்தில் மனிதன்
அதிகம் தொலைத்தது
வாழ்க்கையைத் தான்..
விழுந்த துவாரம்
தேடப் படாத வரை,
தேவதைகள் ..குழந்தைகள்!!
இளமைக்கு மட்டுமே சாத்தியம்!
அடுத்த கட்டத்தில்
முதுமை!!!...