உன் மீதான காதல்

ஒரு பூனையை போல்
என்னுள் சப்தமில்லாமல் நுழைந்து
யானையை போல் கம்பீரமாய்
துவம்சம் செய்து கொண்டிருக்கிறது
என்னை.......
உன் மீதான காதல் !
என் கவிதைகளின்
முதல் வரி மட்டும்
உன் மீதான நினைவுக்கு சொந்தமானது...
பின் வருவன எல்லாம்
நம் காதலுக்கு சொந்தமானது