குருவின் பிரியாவிடை

வாழ்க்கை ஒரு பயணம்..
சில உறவுகள் நிலைப்பதில்லை..
சில உறவுகள் களைப்பதில்லை!
இப்படியாக மனித வாழ்வில்
எத்தனை எத்தனை பரிமாணங்கள்!
ஒவ்வொரு வளர்ச்சிக்கும்
ஒவ்வொரு ஆசான்..

எனக்கு மட்டும் இவள் அம்மா..
எனக்கு மட்டும் இவர் அப்பா...
எனக்கு மட்டும் இந்த உறவு..
எனச் சொல்ல எத்தனையோ
பந்தங்கள் உண்டு வாழ்வினிலே...
ஆனால் எனக்கு மட்டும்தான்
இவர் ஆசான்
எனச் சொன்னவர் எவரும் உண்டோ?

எங்கள் வாழ்க்கை பாதையில்
எத்தனையோ ஆசான்கள் கண்டோம்..
ஒவ்வொரு படிக்குப் பிறகும்
மறுக்க முடியாத பிரிவு..
இதோ வந்தது இந்த நொடியும்..

இலக்கணம் கற்பித்த துரோணருக்கு அர்ஜூனர்களின் நன்றி சமர்ப்பணம்!
கற்பித்த காலம் சிறிதே எனினும்
கற்றுக்கொடுத்த கல்விக்கு
உண்டோ வரையறை?
இலக்கணங்கள் எப்படி மாறாதோ ...
ஆசிரியர் பயிற்சிக்கழகத்தில்
உங்கள் நினைவுகளும் நீங்காது..

பிரிவது மீண்டும் சந்திப்பதற்கே ...

அன்புடனும் பண்புடனும்
உங்கள் தொல்காப்பியர்கள்...

எழுதியவர் : விஜயமலர் & மாலதி (23-Dec-12, 11:19 am)
பார்வை : 8821

மேலே