என் இரவு
இயற்கை அன்னையின்
இந்த நீண்ட நெடும் கூந்தல்களில் - என்
கருவிழிகள் கனத்திருக்க
இமை கூட துணை நில்லாமல்
உறக்கம் தடுத்து
உயிர் விழித்திருந்ததே.......
நிழல்கள் கூடி நின்று கொண்டு
நிழவின் முகம் மறைத்ததே.....
மூவைந்து நாட்களில்
பூப்படைந்து மூப்படையும்
குனாளிநியே.....
விழிகளுக்கு என்று
வீணை வாசிக்க தெரிந்த
சரஸ்வதியே......
இயற்கை எறிந்த
நாணயத்தின் - இனிய
பகுதி நீதானே.......
வெள்ளை நிலவை
இதயமாய் கொண்ட
இனிய அரக்கனும்
நேதானே....
நாளொன்றும் மறவாமல்
இவ்வுலகை
இதயத்தில் அணைக்கும்
இனிய அன்னையும்
நீதானே
என் இரவே.....