கல்வியின் மேன்மை.
தந்தையும் தாயும்
பட்டம் பெற்றோரே
தம்தம் பிள்ளையை
தகுதி மிக்கப்
பள்ளியில் சேர்த்திட
இந்தியத் தலை நகர்
இறுமாப்பு நகரினில்
சந்தையிற் கடைபோல்
சரமாய்ப் பள்ளிகள்
விந்தை அறிவினை
சிந்தையிற் கொண்டவர்
மந்தை மாடு போல்
வரிசையில் சேர்த்தார்.
சரியாக எழுதிய
குழந்தையை அடித்து
”புரியாதா உனக்கு
போக்கத்த பிள்ளையே”
தெரியாத ஆசிரியை
திட்டி அக்குகுழவியை
தேம்பித் தேம்பி
அழவும் விட்டாள்.
வீட்டிற்கு வந்த
சிறுமி அவளோ
காட்டிய குறிப்பு
ஏட்டினைப் பார்த்து
வாட்டம் அடைந்த
பெற்றோர் உடனே
”புகார் ஒன்றும்
கொடுக்க வரவில்லை
தகாத இச்செயல்
தடுத்திட வந்தோமெ”ன
அடாத இச்செயல்
கண்ட தலைமை
சகாயம் செய்திட
எண்ணி ஆங்கே
கல்வி உரைத்தப்
பெண்ணை அழைக்க
”சொல்வது பொய்யாம்
சுட்டிப் பெண் இவள்
கல்வியை எந்த
வயதிலும் கற்கலாம்
இந்தக் குழந்தை
எனக்கே பாடம்
சொல்லித் தருபவள்
அதனால் இவளிடம்
நானும் பாடம்
கற்று வருகிறேனெ”ன
”மெத்தப் படித்த
பெண்ணே நீ இங்கு
பிள்ளை அதனிடம்
கல்வி பயின்றிட
இல்லை உனக்கு
வேலை என்றிட”
கல்வி மேன்மை
பெற்றது அன்று.