பள்ளியும் ,சுதந்திர தினமும்...
"மா.... டைம் ஆச்சு,,,சீக்கிரம்"
மடித்து போட்ட பின்னலுடன் தோழிகளோடு
ஆடி அசைந்து ஒய்யாரமாய் பள்ளிக்கு
நடந்து சென்ற காலம்.....
கொடியேற்றுகையில் முன்வரிசையில்
நிற்பவர்களின் அலங்காரங்களை ரசித்தும்,
கேலி செய்தும் சிரித்த காலம்....
தேசிய கீதம் பாடுகையில் ஏனோ,,,
அன்று மட்டும் புது தேச உணர்ச்சியுடன்
பாடி முடித்த காலம்....
மேடையில் உரை நிகழ்த்தும் போரில்,,,
கதை சொல்லும் சில நிமிடங்களை தவிர
உச்சி வெயிலையும், உட்கார்ந்த மண்ணையும்
ஆயிரம் தடவை பார்த்த காலம்....
பழையதோ, புதியதோ,,, நடனம், நாடகம்
என்றதும் இடித்து தள்ளி உட்கார்ந்து கைதட்டி
மகிழ்ந்த காலம்......
இனிப்பு வழங்கும் அந்த நிமிடத்தில் இல்லை,,
பிற்கால மருத்துவர்,பொறியியலாளர் நாமென்ற எண்ணம்
கைநீட்டி வாங்கி மகிழ்ச்சியுடன் பள்ளி
வீதியினை அடைத்து கொண்டு சென்ற காலம்....
அந்த பள்ளி கால சுதந்திர தின அழகு,,, இன்று இல்லை...
குறுஞ்செய்தியிலும், முக புத்தகத்திலும் பேருக்கு
வாழ்த்து சொல்லும் நம்மில்.....