காதல்
காதல் இல்லை என்றால்
இல் வாழ்வில் இன்பம் இல்லை
காதல் என்றால் இனிமை
காதல் என்றால் அழகு
காதல் என்றால் இனம் புரியாத
இன்பத்தை தருவது
காதல் இல்லா வாழ்வு
வாழ்வே ஆகாது
காதலிப்போம் வாழ்நாள் முழுதும்
காதலிப்போம்
காதலித்து கரம் பிடிப்போம்
காவியத்தில் இல்லாத காதலராய்
இருப்போம்
கற்பனையில் முழ்கி கவி படிப்போம்
சரித்திரம் சொல்லும் காதல்
கோட்டை அமைப்போம்
அங்கே காதல் கோடியை பறக்க விட்டு
காதல் காதல் காதல் என்று
முரசொலிப்பொம்
கோவை உதயன்