முடிவுறாத ஒரு கவிதை

அடித்தல் திருத்தல்கள் ஏராளம்
ஆனாலும் முழுமையடையவில்லை;
ஒற்றைச் சொல்லுக்காக ஏங்குகிறது
முடிவுறாத ஒரு கவிதை.
முதல் சொல்லாகவோ
கடைச் சொல்லாகவோ
இணைப்புச் சொல்லாகவோ
எதுவாகவும் அது இருக்கலாம்.
எதிர்பாராத கோடை மழை போல்
என்றாவது ஒரு நாள்
காத்திருப்பு கை கூடலாம்
கவிதையும் முழுமை பெறலாம்
விடியலுக்காக கவிஞனே காத்திருக்கும் போது
முடிவிற்காக கவிதை காத்திருக்க கூடாதா?

எழுதியவர் : சாய்ஸ்ரீ (25-Dec-12, 12:08 am)
பார்வை : 177

மேலே