தகுதி
அழகான மணமகன்
சொந்த கடை
நல்ல நிறம்
அவருக்கு
நல்ல அரசாங்க
உத்தியோக பெண்
வேண்டும் என்று
தரகர் அவர்
கூறி நிற்க
அழகான பெண்
அவள் -
அரசாங்க உத்தியோகம்
பட்டதாரியவள்
படம் ஒன்றை காட்டி
நிற்க
மணமகன் தன்
சம்மதம் தெரிவிக்க
மணமகன் என்ன
படித்தவர் என
கேட்ட போது
தான் தெரிந்தது
எட்டாம் வகுப்பை
தாண்டவில்லை என்று