சுனாமி
நீ எங்கள் சமூகத்தை கொன்று குவித்த நாள் இன்று
நீ எங்கள் நாட்டு மக்களை கண்ணீரில் தவிக்க விட்டு
நீ மனது விட்டு சிரித்த நாள் இன்று
நீ எங்களை பயம்புருத்தி ,
நீ சந்தோசம் அடைத்த நாள் இன்று
நீ என் பெற்றோர்களையும், என் தம்பி தங்கைகளையும் ,
நீ என்னிடம் இருந்து பிரித்து
நீ என்னை தனிமையில் தவிக்க விட்ட துக்க நாள் இன்று
நீ எங்கள் உடமைகளையும் , வீடுகளையும் சூறையாடி
நீ எங்களை நடு தெருவில் நிர்கேதியாய் நிற்க வைத்து
நீ கோர தாண்டவம் ஆடிய நாள் இன்று
கடல் பசித்தால் என்னவாகும் , என்று உணர்த்திய நாள் இன்று ,
கடல் பக்கம் போகவே ,
உன்னை நினைக்கும் என் மனதுகள் ,
உன்னை ரசிக்க மறுக்கிறது
இரக்கமில்லாமல் நீ செய்த
இந்த படுகொலைகளை நினைத்து
பயத்தில் இன்னும் எங்கள் மனங்கள்
படபடப்போடுதான் உள்ளது,
எப்படி உன்னை ரசிக்க இயலும்
கடல் அலைகளே உங்களை இரு கை கூப்பி
நானும் என் மகளும் வணங்கி கொள்கிறோம்
அப்படி ஒரு கொடுரமான நிகழ்வை மீண்டும் நீங்கள் நிகழ்த்தாமல் இருங்கள்
எப்பொழுதும் போல அமைதியான அலைகளாய் நீங்கள் இருங்கள்
நாங்கள் வருகிறோம் உன் இயற்க்கை அழகை மீண்டும் ரசிக்க கடல் அன்னையே …