தலைப்பை விழுங்கிய துளிகள் !

ஒரு புள்ளியை சூழ்ந்து
சம தொலைவில்
கை கோர்த்து நிற்கும்
ஓராயிரம் புள்ளிகள் !

இரு புள்ளிகளுக்கு
இடைப்பட்ட
குறைந்தபட்ச தூரத்தின்
பாதச் சுவடு !

மூன்று புள்ளிகளுக்கு
இடையேயான
நவயுக காதல் !

நான்கு புள்ளிகள்,
திசைபரவி இருந்தும்
இரண்டோடு மட்டுமே
இருக்கிறது உறவு !

வளைவு
நெளிவுகளுக்கு
நடுவே நடப்பட்டு
கிடக்கும் புள்ளிகள் !

(உறவுகளே...இத்துளிகளுக்கான பொருத்தமான தலைப்புக்கள் கணிக்கவும், என் மூளையில் கிடக்கும் தலைப்பு, யார் வாய் வருகிறதென !)

எழுதியவர் : வினோதன் (26-Dec-12, 11:51 am)
பார்வை : 206

மேலே