யார் வரைந்த ஓவியம்

நீல வானத் திரையினில்
அந்தியின் அழகிய ஓவியம்
யார் வரைந்தது ?
நிலவே நின் வருகைக்காக
ஆதவன் வரைந்ததோ ?
இல்லை இல்லை கவிஞனே
கையில் கணினியுடன்
காதல் நினைவுடன்
நீ வருவாய் என்று கதிர் வரைந்தது
யார் சொன்னது ?
நான்தான் நிலவு சொல்கிறேன்
எழுது எழுது என் இலக்கியத் தோழா
எழுதி எழுத்தில் பதிவு செய்
காலத்தால் அழியாத
ஓவியமாய்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Dec-12, 4:00 pm)
பார்வை : 183

மேலே