delhi gang rape

தலைநகர் நகரம்
பெரிய தலைகளும் அதிகம் ;

இரவின் ஆரம்பத்தில்
இளம்பெண்ணின் இறுதியும் ஆரம்பம்;

பேருந்தில் பெண்ணும்
அவள் நண்பனும்;

மற்றும் சில
ஆசைக்கார ஆண்களும் ;

நங்கையை சுவைக்க
சுகம் நாடினர் ;

நண்பனை அடித்து
நாடகம் தொடங்கினர் ;

மூன்றாயிரம் வினாடிகள்
விடாமல் விளையாடினர் ;

அவள்..

வலியில் கதறினால்
உடல் சுருங்கினாள்;

கூச்சலிட்ட போதிலும்
கூசாமல் களித்தனர் ;

தடயம் தெரியாமலிருக்க
தகடு செலுத்தினர் ;

துயரம் தாளாமல் அவள்
திணறி வாடினாள் ;

எல்லாம் முடிந்த பின்
வீசி எறிந்தனர் ;

கொடூரப்படுத்தி வீசியதற்கு
கொலை செய்து வீசியிருக்கலாம் ;

கொடூர மனிதர்களை
கைது செய்யாதீர்கள் ;

குத்தி கொடுமை படுத்தி
கொலை கூட செய்யுங்கள் ;


1)
அவள்..
செத்துக் கொண்டிருக்கிறாள்
பெண்மை சிதறிக் கிடக்கிறாள் ;

காப்பாற்றுவதற்கு பதில்
கருணை கொலையேனும் செய்யுங்கள் ;

ஏனெனில், உயிர் பிழைப்பினும்
அவள்..

செத்துக் கொண்டு தான் இருப்பாள்
பெண்மை சிதறிப் போனதால்...

2)
அவள்..
செத்துக் கொண்டிருக்கிறாள்
பெண்மை சிதறிக் கிடக்கிறாள் ;

வாடிய பயிராய் ஆன போதிலும்
வாழ தினமும் துடிக்கிறாள்;

உன்னால் பல பெண்ணின் அவலம்
வெளியே இன்று வந்தனவே ;
அனைவரின் குரல்கள் உனக்காகவே
அதற்காகவேனும்

உயிர் பிழைத்து வா;
மறு பிறவி எடுத்து வா!!

எழுதியவர் : Baveethra (26-Dec-12, 8:08 pm)
பார்வை : 158

மேலே