காதலிக்க ஆசை

பள்ளி நாட்களிலும்
கல்லூரி நாட்களிலும்
என்னைச் சுற்றிலும்
காதலர்கள்
வலம் வரும் வேளையில்
காதலிக்கத் தவித்த மனதை
காலச் சூழ்நிலைகளின்
காரணமாய் கட்டிப் போட்ட
தருணங்களில் எல்லாம்
நினைத்துக் கொள்வேன்
திருமணமான பின்
தித்திக்கத் தித்திக்கத்
காதலிக்க வேண்டுமென......
காதலித்துத்
திருமணம் செய்து கொள்ளும்
இக்காலத்தில்
காதலிப்பதற்காக
திருமணம் செய்து கொள்ளும்
என்னை
நீ கேலி செய்வாயோ ?