உலகத் தமிழர்களின் புரட்சித் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்....
உலகத் தமிழர்களின் புரட்சித் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்....
2006 ல் நடந்த உண்மை பதிவேடு இது......
2000 ம் ஆண்டு ஆனையிறவு கூட்டு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளின் கைகளில் வீழ்ந்தபின் இலங்கை தீவில் இரண்டு இராணுவக் கட்டமைப்பு உண்டு என உலகமே ஒத்துகொண்ட காலப்பகுதி ..
ஒன்று இலங்கை இராணுவம் , மற்றையது தமிழீழ இராணுவம்...அதுவும் இனிமேலும் தொடர்ந்து போர் நடந்தால் ..அது இலங்கை இராணுவத்துக்குதான் பேரிழப்பு என்ற ஒரு நிலைமை ...இப்படி இருக்கும் போதுதான் இலங்கை அரசு அரசியல் பேச்சுவார்த்தைக்கு அடிபணிந்தது....
அதை தொடர்ந்து எமது தேசியத்தை காணுவதற்கு என்றும் ,அரசியல் நல்நோக்கம் என்றும் பல குள்ளநரி கூட்டங்கள் வன்னி நிலப்பகுதிக்குள் படை எடுத்த காலமது ....எரிக் சோல்கைம் என்றும்,யஹூசி அஹாசி என்றும் ,ஏன் இன்னும் எத்தனை எத்தனையோ உலகஅரசியல் தலைவர்களும் , இப்படி பெரிய பெரிய வித்துவானுகள் எல்லோரும் கிளிநொச்சி வந்து எம் தலைமையோடு கை லாகு கொடுத்த காலமது....
கலகம் தீர்த்து வைப்பது நிட்சயம் என்று நோர்வே திடமாக நின்ற காலமதுவும் கூட....
இந்த உலக நாடுகளை எதிர்த்து இனிமேல் இலங்கை இராணுவம் போர் செய்ய முடியாது என்றொரு சூழ்நிலை..மாவிலாறு என்று ஒரு ஊர் இருப்பது யாருக்கும் தெரியாததும் கூட .. வழமைபோல ஒரு பெரிய உலக அரசியல் புள்ளி ஒருவர் எமது தேசிய தலைவரை காணுவதற்கு எமது அரசியல் தலைநகர் கிளிநொச்சி வருகிறார் ..
எமது தேசிய தலைவரையும் சந்திக்கிறார் , அரசியல் பேச்சுகளும் சில பேசுகிறார் மீண்டும் வந்த வழியே போய் விடுகிறார்......... எம் தேசிய தலைவருக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த தளபதிகள்,போராளிகள் அனைவரினதும் முகத்தில் ஒரு சந்தோசம் எதற்கு தெரியுமா ..அதை அவர்களே தலைவரிடம் சொல்கிறார்கள்..
"அண்ணே எம்மை யார் யாரோ பெரிய ஆட்கள் எல்லோரும் வந்து பார்கிறார்கள் இத்தோடு நாம் பட்ட துன்பங்களுக்கு விடிவு கிடைத்து விடும்,எம் மாவீரர்கள் கண்ட கனவை நனவாக்கும் காலம் வந்துவிட்டது தானே " என்று கேள்வியாகவும் கேட்டு இருக்கிறார்கள்...
எம் தலைவர் ஒரு விநாடி கூட தாமதிக்காமல் பதில் அளித்தார்....எப்படி தெரியுமா..?
"இல்லை அப்படி மட்டும் நினைக்காதீங்கோ....இனிமேல் தான் எமது இயக்கமும்,எமது மக்களும் இதுவரை காலமும் படாத பின்னடைவையும்,இழப்புகளையும் சந்திக்க போகிறோம் தயாராக இருங்கள் " என்று கூறி இருக்கிறார் ..
இதை கேட்ட தளபதிகளுக்கும்,போராளிகளுக்கும் மிகவும் குழப்பமாக எம் தலைவரின் முகத்தை பார்த்து இருக்கிறார்கள் ..பதிலுக்கு எமது தலைவர் மெல்லியதாக சிரித்து விட்டு அங்கிருந்து போய் விட்டார் .........அன்றைய எமது தலைவரின் தீர்கதரிசனத்துக்கு 2009 ல் பதில் கிடைத்தது அனைவருக்கும் ...
பின்னடவை கணிக்க தெரிந்த அவருக்கு அதை எப்படி....? சீர் செய்ய வேண்டும் என்பது தெரியமலா போய் இருக்கும்.....அதைவிட இன்னும் சில விடயங்கள் அவர் கூறி இருந்தார் என்பதும் உண்மை....
ஆனால் அதை இங்கு எழுத்து வரிகளால் எழுதி எதிரிக்கு ஏன் எங்கள் தகவல்களை கொடுப்பான் என்று நினைக்கிறோம்....
நாம் முன்பு கூறியது போல இந்த உலகமே எதிர்பாராத திருப்பு முனையோடு எம்தலைவர் பிரகாசிக்கும் போது அது என்னவென்று எல்லோருமே புரிந்து கொள்வார்கள்..ஏன் என்றால் எந்த இனமுமே பெறமுடியாத ஒரு வீரமிகு ,ஆற்றல்மிகு தீர்கதரிசனமிகு,இன்னும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத தலைவரை நாம் பெற்றுள்ளோம்...அவரின் காலத்தில் நாம் ஈழம் காண்பது உறுதி ..அதுவரை எமது தலைமை எம்மிடம் தந்த பாரிய பொறுப்புகளை நாம் ஒவ்வொருவரும் செவ்வனே,சீராக செய்து முடிப்போமாக ...
தமிழரின் தாகம் தமிழீழ தாகம்
நன்றி
ஹோசிமின்