திசைமாறிய கவிதைகள்
கவியே!
என்று பிறந்தாயோ
அதை நானறியேன்...
உறவுகள் ஒதுங்கிநின்ற வேளையில்
உன்வரியால் ஆறுதல் பெற்றேன்...
படைத்தவனை மறந்து
பாசம்கொண்டேன் உன்மேல்...
இயற்கையையை ரசிக்கவைத்தாய்
உணராத சுகத்தை
நீயே தந்தாய்...
கனவுகள் பலிக்காத பலரின்
கனவுகளை நீ சுமந்தாய்
என் சுமையும் நீயறிந்தாய்
உன் சுமையை யாரறிந்தார்???
பல பொருளை நீசுமந்து
பட்டினியாய் உலம்வர
பசியோடு புசித்திடவே
பாசம்தானே வேண்டி நின்றேன்...
தேடியதும் கிடைக்கவில்லை
தேடிவந்ததும் நிலைக்கவில்லை என்று
வேடிக்கை கதை பேசி
மூலையிலே முடங்கிக்கிடக்கும்
மாபெரும் மனிதரிடையே
ஊன்றுகோலாய் நீயிருந்து
உதவிக்கரம் நீட்டிடவே
மாற்றம் தரும் புதியவனே-உன்னால்,
மனிதனாக வாழுகின்றேன்...
என்றும் அன்புடன் அனித்பாலா.