மரணம் என்ற ஜனனம்
என்னவனே
நம் காதல் பிரிவால்
ஒவ்வொரு நொடியும் எனக்குள்
மரணம் என்ற ஜனனம்
மரணம் உன் பிரிவால் !
ஜனனம் உன் நினைவால் !
கனவு அல்ல காதலனே
உன் மீது நான் கொண்ட
காதல் -நம் வாழ்க்கை
அதனால் தான் ஏனோ!
என்னை மறந்து விடு என்ற
உன் வார்த்தைக்கு பின்னும்
நம் காதல் நினைவுகளுடன்
துடித்துக்கொண்டிருக்கிறது !
இவள் இதயம்