பயணபார்வை

வயலின் நடுவே வசதியான வீடு கொஞ்சம் இடைவெளியில் அடுக்குமாடி குடியிருப்பு அழகாக

எதிரில் சற்று பெரிய தொழ்ற்சாலை இடையிடையே சிறய பெரிய பாலங்கள் அழகாய்தான் இருக்கிறது - ஆனால்

வயல்கள் இற்றுப்போய் அறுவடை அற்றுப்போய்விட்டதே

சுற்று வேலி மட்டும் அதன் நடுவிலும் கட்சிக்கொடி

சுகமான மதிய உணவு அலுவலக அறைவிட்டு மரத்து நிழலில்

கடைதெரு காதை கிழிக்கிறது சத்தம்

சத்தம் போட்டுதான் சில சந்த்ததிகளின் வாழ்க்கை இங்கே (பேருந்துநிலையம்)

இந்த மூன்று மன்புமிகுகளால் மேற்கூரையை மட்டும்தான் திறக்கமுடிந்திருக்கிறது

2.40லட்சம் மதிபீடா இதற்க்கு பொரியாலனுக்குதான் தெரியும்

கடை விளம்பரங்கள் பதாகைகள் அதிகமாகத்தான் இருக்கிறது கண்ராவி சுத்தம் தான் சுத்தமாக இல்லை

குட்டையில் குளிக்கும் குழந்தைகள்

அருகில் பாழடைந்த இரண்டு கட்டிடங்கள்

செம்மறி ஆட்டுமந்தை, அருகில் சின்னதாய் பெயர்பலகை
கரும்புத்தோட்டம், வண்டிமாடுகள்,

சாக்கடையின் அருகே குடிகொண்டிருக்கிறாள் காளி

செல்கோபுரம் அருகே செத்தவன் கல்லறை

கட்டுமான பணியும், புதுநாற்றுடன் வயலும்

அரசின் இடுகாடு புதர்களுக்கு அர்ப்பணம்

காய்ந்து போன மாலையுடன் காமராசர்
அருகே கந்தசாமி மலர்வியாபாரம்

ஒட்டுக்கூரையுடன் ஊராட்சி தொடக்கப்பள்ளி

அரசுமாணவியர் விடுதி அருகில் எதுவும் இல்லை

பெரியார் நினைவு சமத்துவபுரம் அருகே கிராமத்து யோகஆஞ்சநேயர்

இடையே மாதா செவிலியர் கல்லூரி

அடடே ஒரு பாதிரியாருக்கு சிலையப்பா?

சிதிலமடைந்த கூரை வீடுகள்
தங்கவண்ண கலசத்துடன் கோயில்

வண்ணம் மாறிவிட்ட முனியாண்டி விலாஸ் பெயர்பலகை
பூட்டியிருக்கும் நூலகம்
பாட்டுபாடும் கல்யாணவீடு

செங்கல் சூலை சிகப்பான மணல்மேடு
கரம்புகளில் மேயும் மாடுகள்

எட்டும் தூரம்வரை வண்ணம் பூசிய கரும்கற்கள் வரவேற்கின்றன நிலம் வாங்க

முட்காடு இடையே வாய்க்கால்

ஐந்துதலை நாகப்பாம்பு குடைநிழலில் அமர்ந்திருக்கிறாள் அம்மன்.
அம்மணமாக குளிக்கிறாள் குழந்தை

ரயில் ரோடு அருகே மேம்பால வேலை
குன்றுபோல் ஜல்லிகலவைகள் காய்ந்துகிடக்கின்றன

கட்சிக்கொடி கம்பீரமாய் பரக்க அருகே
அண்ணாவின் சிலை அரைதலை வண்ணத்தோடு

மறுபடியும் பேருந்துநிலையம் உருமிமேளம் அடித்து உதவிகேட்க்கும் சிறுமிகள்

மையால் மீசைவைத்த சிறுவன் சில்லறைக்காக கையேந்தும் காட்சி

"அசுத்தம் செய்யாதீர்" அறிவிப்போடு சுற்றுசுவர்
அதிலும் சிலர் சிறுநீர் கழிக்க!?

எனக்கும் அவசரம்தான்

(தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்)
விழுப்புரம் - விருதாச்சலம் சாலைகளில் ஓரத்தில் கண்டவைகள்

எழுதியவர் : தமிழ்நேசன் (சுபாஷ்) (29-Dec-12, 4:33 pm)
சேர்த்தது : thmizhnesan
பார்வை : 134

மேலே