எனக்கான காத்திருப்பில்

கடிந்து கொள்கிறாய்...
வருகிறேனென்று
காக்க வைத்து விட்டு
வராமல் போனதற்காய்.
நானும் மன்னிப்பு கேட்கும்
பாவனையில்
மௌனித்து நிற்கிறேன்,
ஏதேதோ பேசி
உன்
கோபத்தை கொட்டி செல்கிறாய் நீ.
ஆனாலும்
சொல்லப் போவதில்லை
உன்னிடத்தில்,
எனக்கான காத்திருப்பில்
நான் ரசித்த
உன்
அவஸ்தைகள் பற்றி...!
கோபத்தின் சுவடுகள் பற்றி....!
சுகமான சோகம் பற்றி.....!
கலவரமான கண்கள் பற்றி.....!
துடித்த உதடுகள் பற்றி....!
விரக்தியின் உச்சம் பற்றி...!

எழுதியவர் : நிலா (29-Dec-12, 4:22 pm)
பார்வை : 136

மேலே