புத்தாண்டு 2013

புத்தாண்டு பிறக்கிறது
பழைய நினைவுகளின்
புதிய தொகுப்பு
இன்றுடன் தொடங்குகிறது

வலிகள் தொலையட்டும்
விழிகள் திறக்கட்டும்
வழிகள் தொடங்கட்டும்

எண்ணிய காரியம்
தின்னியமாகட்டும்
ஏழ்மை இனி
அன்னியமாகட்டும்

எல்லார்க்கும் எல்லாம்
கிட்டட்டும்
அண்டம் வரை புகழ்
எட்டட்டும்

நம்பிக்கை நாற்றை
நடவு செய்வோம்
நல்லோரின் உறவுகளை
பதிவு செய்வோம்

பொறாமைப் பேய்கள்
பூண்டோடு அழியட்டும்
பூரண அன்பு
பூவுலகெல்லாம் பொங்கி வழியட்டும்..........

எழுதியவர் : த. அருள் Roncalli (31-Dec-12, 2:14 pm)
பார்வை : 210

மேலே