நாட்டிற்காக .. என் மனதிலிருந்து ...

அன்பை பரிமாறும் மனிதற்குள்
கொஞ்சம் நாட்டின் வளர்ச்சி பற்றிய
விழிப்புணர்வும் பரிமாறிகொள்வோம் !

பேசிக்கொண்டு நேரத்தை வீணடிப்பதை
விட்டுவிட்டு செயலில் நம் நினைத்த நல்லவைகளை
இந்த நாட்டுக்கு செய்ய முன்வருவோம் !

விவசாயிகள் இறந்தால் விவசாயமும் இறந்துவிடும்
என்பதை புரிந்து எல்லைகளுக்குள் உள்ள வேற்றுமை
அகல
இந்தியன் என்ற சொல் ஒன்று உண்டு என்பதை அறிய வெயப்போம் !

கலாச்சாரத்தை சீரழிக்கும் ஆடைகளை தவிர்க்க முடியாது இந்த ஆடம்பர உலகத்தில் ஆனால் அதையே நம்கலச்சரதிற்கு ஏற்றவாறு வடிவமைக்க திட்டம் கொண்டு வர வேண்டும் !

கழிவுகளை மாற்றி மரங்களுக்கு உரமாக்கும்
அறிவியல் வல்லுனர்களை கண்டெடுத்து தூய்மையான நாடாய் இந்த அரசு மாற்ற வேண்டும்!

அறிவியல் வளர்ச்சியை முறையாக பயன்படுத்தும்
நுட்பங்களையும் யோகாசன கலைகளையும் பள்ளிகளிலேயே பாடத்தில் கொண்டு வர வேண்டும் !

இளைஞ்சர்கள் முன்வந்தால் நம் நாட்டுக்கு சத்துள்ள வாழ்வை கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்க இளையசமுதாயம் முயற்சி எடுக்க வேண்டும் !!!

பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாய் இருக்க காவலர்கள் மட்டும் உதவி செய்ய முடியாது அது முழுக்க முழுக்க பெற்றோர்களின் வளர்ப்பு என்னும் முதல் உதவியில்தான் உள்ளது !

உலகம் உன்னை மதிக்க வேண்டுமானால் நீ உலகத்திற்கு மதிப்பு கொடு ! அன்பாய் இயற்கையோடு பழகு இயற்கை உன்னை வளமாய் வாழ வழி வகுக்கும் !!!!

எழுதியவர் : கோகுல் (1-Jan-13, 2:46 am)
சேர்த்தது : K LAKSHMINARAYANAN
பார்வை : 101

மேலே