இயற்கை
கதிரவன் கிழக்கே தோன்ற
அலைகடல் திரண்டு ஓட,
மக்கள் மனதை கவரும்
உயர் மலை சிகரமும்
ஆழ பள்ளத் தாக்கும்
நீள பெருங் குகைகளும்
நெடிய மர இலைகளும்
பசுமை நிற புல்வெளி
வளத்தை பெருக்கும் வயல்வெளி
பூக்கள் மணம் கமல
வெண் மேகங்கள் எல்லாம்
கார் மேகங்களாக உலவ
வெப்பத்தை குறைக்கும் மழைநீர் விட்டு
கதிரவன் மேற்கே மறைய
கிழக்கே மதி மலர்ந்து
விண்மீன் அணியாய் தோன்ற
மனித நாகரிக வாழ்க்கையில்
மக்கள் ரசித்து காணும்
கனவுகள் கவிதை ஆக
இயற்கை மேற்கே மறையுதப்பா!