பெண்மை சிதைக்கப்பட்டவள்..

"உலகி இதுவரைச்
சிதைக்கப்பட்ட பெண்களின்
சதைகளைக் கொண்டே
நிற்காத
உதிரப்போக்குடன்
நன் வாழ்கிறேன்"
என்று இணையத்தில்
ஒருத்தியிட்ட நிலைத்தகவல்
என் இரவுகளைத் தின்று கொண்டிருக்கிறது.

இரத்தக் காயங்களுடனான
நிர்வாண உடலுடன்
இமைக்குள் நுழைந்து விடுகிறாள்
ஒருத்தி.
நாசி எங்கும்
ரத்த வாடை..
பெண்மை சிதைக்கபட்டவள் அவள்..
வார்த்தைகள் ஏதுமில்லை
அவளிடமிருந்து.

மௌனம்..

மௌனம்..

என்னைச் சாகடித்துக்
கொண்டிருக்கிறது
இந்த மௌனம்...
இந்த இரவு..
இந்த நிசப்தம்..

எழுதியவர் : தனேஷ் நெடுமாறன் (1-Jan-13, 4:44 am)
பார்வை : 171

மேலே