கவிதை எனும் மொழி

நீல நயனங்கள்
எனக்கு நித்தமும்
கவிதை தரும்.

நித்திலம் கோர்த்தது
போல் சொல்
மாலையும் தரும்

உண்மை போலவே
பாவிக்கும்
பொய்மையும்

அதையும் இரசித்தே
அதனோடே கைகுலுக்கி
சமரசம் செய்யும்
உண்மையும்

'கவிதை'
என்ற மொழியில்
மட்டுமே சாத்தியமா ?

எழுதியவர் : Minkavi (1-Jan-13, 1:05 am)
பார்வை : 177

மேலே