உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே(பொங்கல் கவிதை போட்டி)

தாயும் சேயும் பிணைந்திருப்பது போல்
உழவும் உழவனும் பிணைந்து
கருவை விதைப்பதை போல்
செழு வயலில் விதைவிதைத்து
குளிர்காலத்தில் குதிகால்வலியை மறந்து
குதித்து விழும் தண்ணீரை பாய்ச்ச
அதிகாலையில் ஆதவனுக்கு முன்விழித்து
தண்ணீரோடு கண்ணீரையும் பாய்த்து
செழுமையாய் பயிர் வளர
உரமாய் உயிரையே பணித்து
உழவன் தன்கஷ்டத்தை நீக்காமல்
உழவு வயலில் களைகளை நீக்கி
பாசமாய் குழந்தையை தழுவுவதுபோல்
பச்சைபசேல் பயிரை தழுவி
அல்லும் பகலும் அயராது விழித்து
விசப்பூச்சிகள் தாக்காமல் காத்து
பால்முளைத்து பயிர் வளர்ந்து
பார்வைக்கு களிப்பு தந்ததும்
சளிப்பு இன்றி கதிர்அறுத்து
தலையில் சுமந்து காற்றில்தூற்றி
மலையாய் குவித்து மனம் நிறைந்தான்
உழவின்மேல் கவனமாய் உடலின்மேல் கவனமின்றி
கழித்ததால் மரணம் அறியாமலேயே....

எழுதியவர் : ஆர் சுதா (1-Jan-13, 7:03 pm)
பார்வை : 135

மேலே