புரட்சி விதை 2013

இளைஞனே பலமிக்க எதிர்காலம் இருப்பதாக எண்ணிவிடாதே
நிகழ்காலத்தில் உன் பாதத்தை பழுதற ஊன்ற கற்றுகொள்
இந்தியாவின் தூண்கள் நாம் என்று மார்தட்டாதே
பிரபஞ்சத்தை நோக்கி உன் பார்வையை விரித்து விடு
உனக்கேன்று கொள்கைகளை வைத்துகொள்ளாதே
உன்னை வைத்து கொள்கைகள் உருவாகட்டும்
சமுதாய புரட்சியாளர்களின் பின்னால் ஓடாதே
தனி மனித புரட்சியை உண்டாக்க திட்டமிடு
எரிமலை போல் குமிறி கொண்டுஇருக்காதே-விண்மீன்கள்
போல் வானத்தில் வட்டமிட்டு கொண்டிரு
விழு ஆனால் விழுந்து கொண்டே இராதே
ஒவ்வொரு மனிதனும் புரட்ச்சியாளன் தான்
புரட்சி என்னும் விதை விதையாக இல்லாமல்
மரமாக வளர்ந்து மலராக பூக்கட்டும் !!!!!!!!!!

எழுதியவர் : கார்த்திக் (1-Jan-13, 7:33 pm)
பார்வை : 132

மேலே