மலர்கிறதே மனம் நனைகிறதே

மலர்கிறதே மனம் நனைகிறதே
பனிகளிலே நனைந்த பூப்போலே
மெல்ல உள்ளம் துள்ளி குதிக்கிறதே
உன்னை தேடி கண்கள் பார்க்கிறதே
மனம் பிறந்த குழந்தையானதே
மழலை பேசும் கிளியானதே
என்னை கொஞ்சி அள்ளி அனைப்பாயோ
இல்லை சின்ன குறும்புகள் செய்வாயோ
ஓசையின்றி நான் பாடும் பாடல் நீயும் கேளாயோ
மௌன மொழிகள் பேசும் கண்னிலே
சொல்லும் வார்த்தைகள் அறிவாயோ
உன் பதில்களை காதல் மொழியால் சொல்லிவிடு
என் தவிப்புக்கு விடுதலை தந்துவிடு
உன்னுடன் வாழும் வரமும் அளித்திடு
நான் அனுதினம் வாழும் உயிராலயம்
உன் இதய வாசலே என் சரணாலயம்....

எழுத்துலக தோழர் தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் ! நலமுடன் ! மகிழ்வுடன் !

எழுதியவர் : ஆயிஷாபாரூக் (2-Jan-13, 2:48 pm)
பார்வை : 202

மேலே