\'\' பொங்கல் திருவிழா கவிதை போட்டி\'\' உழவும் உழவனும் மரணவிளிம்பில்!
உழவும் உழவனும் மரணவிளிம்பில்!
அன்று... ... ...
சிந்துநதி கரைதனில் உயிர் பெற்று
சந்தன, திலகவாசனையாக உலகம் பரவி
ஆறாமறிவு உலகுக்கு ஈந்த முதற்கொடை
வருமனிதவுயிர் வாழும் வழிமுறை உழவே...
நடோடி வாழ்வை தடுத்து நிறுத்தி
கரும்பு, கேழ்வரகு, நெற்கழனி மணம்பரவ
தும்பி பறந்து மலர்சோலையில் சிந்துபாட
குடும்ப குடிசைகூட்டில் வைத்தது உழவே...
கலப்பை தோள்தங்க; நண்பர் (ஆடு, மாடு) படைசூழ
நிலத்தை சீர்படுத்தி; பலவுயிர் (பறவை, ஊர்வன) வாழ
உழவன், உழத்தி உதிர்த்த வியர்வைமழை
பிறமனிதன் உயிர்வழ தந்த மருந்துணவு!
இன்று... ... ...
மழை, வெயில்,காற்றிலுழைக்க விரும்பா இளமை
கல்வியறிவு சேற்றில் காலுன்ற மறுப்பது புதுமை
ஆடு, மாடு மேய்ப்பை நாகரீககுறைச்சலாக நினைப்பது வெறுமை
திருட்டு அரசியல்வதிகளால் குருடனாகி போனோம்!
அண்டைமாநிலம் துளிநீர் தர மறுக்க
பருவமும் திசைமாறி, வழிமாறி போக
விளைநிலம் வெடித்து கட்டிடம் தாங்க
மொழிமறந்த தமிழன் வரிசையில் இன்று உழவும்...
வெளிநாட்டு ணவுக்கு எல்லோரும் அடிமை
வலியறியா யிடைதரகன் உழவன்கோவணம் உருவ
இயந்திரம், இறக்கைமுளைத்து புற்றீசலாக பெருக
ஆடு, மாடுடன் உழவும் மரணவிளிம்பில் …
***வாழ்க வளமுடன்***