உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் கவிதை போட்டி )
சொல்லி மாழாவில்ல -செஞ்ச பாவம் ஏதுமில்ல
சிந்திய கண்ணீரையும் வந்து துடைக்க ஓர்
நாதியில்ல
வேறதொழிலும் வலுத்தாச்சு-தண்ணிக்கும் நிறத்த
(சாயகழிவு)கொடுத்தாச்சு
விவாசாய நீருலயும் சுத்த விஷத்த தெளிச்சாச்சு.
காவிரி ஆத்தாளும் இங்க வருவத குறச்சுபுட்டா
வைகை ஆத்தாவோ தன் கைய விறுச்சுபுட்டா
இருக்கிற ஊருலயும் ஆறு வத்திட்டே போகுதடி
இது தெரியாம மணல -சில கும்பல்
தோண்டிவிற்குதடி
வானத்த பாக்காம உழுத காலம் களஞ்சிடுச்சு
இந்தபருவ மாறுதலால் வானம் பல்ல காட்டிடுச்சு
விளஞ்ச நிலத்தையும் இப்ப விலபேசி வித்தாச்சு
இருக்கிற நிலம்கூட வேதியல் உரத்தால விசமாச்சு
இறைவன பழுது பாக்க சொல்லு உழவின் நழிவ
தீக்க சொல்லு
இயற்கை விவசாயத்த மண்ணுல மீண்டும் திணிக்க
சொல்லு
உழுதே கலச்சிருந்த வாழ்க்கைய மீட்டுக் கொடுக்க
சொல்லு
இந்த தையிலாவது எங்களுக்கு நல்ல வழிய காட்ட
சொல்லு ...............