அன்புடன் அம்மா
அன்புடன் அம்மா....................
என் உயிர் கொடுத்து உனக்கு உயிர் கொடுத்தேனே
அதை மறந்தாயே!
என் உதிரத்தை பாலாய் மாற்றினினே நீ பருகுவதர்காக
அதை மறந்தாயே!
உனக்கு பருப்பு சோரு பிடிக்கும் என்பதற்கு நான்
பட்டினி கிடந்தேனே
அதை மறந்தாயே!
தீபாவளிக்கு ஆளுக்கு ஒரு துணி என்று அப்பா சொன்னார்
நீ இரண்டு கேட்டு அழுததால் கிழிந்த புடவையோடு நான் கொண்டாடிய தீபாவளிகள்
எத்தனையோ
அதை மறந்தாயே!
நிம்மதியாக நீ உறங்க நான் தொலைத்த இரவுகள்
எத்தனையோ
அதை மறந்தாயே!
தினம் பள்ளி நீ செல்ல
தின்பண்டம் நீ வாங்க
திருப்பதிக்காக சேமித்த உண்டியலில்
திருடிய சில்லறை எத்தனையோ
அதை மறந்தாயே!
இருதய வலி வந்தாலும் இரண்டு ரூபாய்
மாத்திரை போதும் எனக்கு
உனக்கு இருமல் வந்தால் கூட இரண்டயிரம்
செலவு செய்து வைத்தியம் பார்த்தேன்
என் இரண்டு கை வளையல்கலை விற்று
அதை மறந்தாயே!
எத்தனை வயதானாலும் எத்துணையும் வேண்டாம்
உன் துனை போதும் என்றாயே
அதை மறந்தாயே!
முன்னொரு நாளில் முற்பகல் ஒன்றில் நீ கொடுத்த
முத்தத்தின் ஈரம் இன்னும் என் கண்ணில் உள்ளது
கண்ணீர் என்ற பெயரில்.................. நீயோ
அதை மறந்தாயே!
நீயோ இருக்கிறாய் தாய்லாந்து நாட்டிலே
உன் தாயோ தவிக்கிறேன் தனிமை என்னும் சிறையினிலே!!!!!!
என் உயிர் மூச்சை பிடித்திருக்கிறேன்
உன் அன்பு எனும் சுவாசத்திற்காக..................
அன்புடன் அம்மா....................