செத்தொழிவீர்..!! எச்சரிக்கை..!!
பேசிப்பேசி வளர்ந்து
பார்த்துப்பார்த்து மலர்ந்து
தொட்டுத்தொட்டு தொடர்ந்து
விரும்பிவிரும்பிக் கலந்து
பருகிப்பருகி உணர்ந்து
இன்பமின்பம் அருந்து..
விரும்பாத பெண்ணெனில்
கட்டிய மனைவிமட்டுமல்ல
வணிகமகளிரையும் தொடுவது தவறே!
காமம் கட்டுப்பட்டிருந்தால் கண்ணியம்
கட்டறுத்துத்திரிந்தால் கயமை
அளவில்லா குடி
மதிகவிழ்கும் மது
போதையேரிய இரத்தம்
பித்தேறிய எண்ணங்கள்
காமவெறியேரிய மனது
அலைந்திடும் மிருகங்கள்
கண்டவிடமெல்லாம் அலையும்
கண்டதையெல்லாம் குதறும்
நல்லதையெல்லாம் அழிக்கும்
நாற்றச்சகதியில் உழலும்
மதியிழந்த மடையர்களே!
ஒன்றுமட்டும் அறிந்திடுவீர்!
ஆணென்ற திமிரில்
அகம்பாவம் பிடித்தாட்ட
மதுவின் மயக்கத்தில்
காமவெறி புகுந்தாட்ட
பெண்ணை மதிக்காது
பெண்மை அழித்துத் திரிந்தால்
பெற்றபிள்ளை முகத்திலறையும்
பேரபிள்ளை அற்றுப்போகும்
கட்டிய கோமனமும் கைவிட்டுப்போகும்
நாதியற்று நடுத்தெருவிலலைவீர்!
புழுபுழுத்தே செத்தொழிவீர்!