உலகம் இருந்தென்ன பயன் ....?!

சூரியன் உதித்தபின்னும்
இருளில் மூழ்கிக் கிடக்கின்றேன்
பாவங்கள் தம் படைகளோடு சூழ
பார்வைகள் இன்றித் தவிக்கின்றேன்

உயிர்களை துச்சமெனக்
கொண்டாடும் காரியதரிசிகளால்
வாழ்வானதோ நிலைப்பாடில்லாது
தள்ளாட்டம் கண்டு தரை தொடுகிறது

பணப்பெருக்கம் வேண்டி
உறுதிமொழிகளை முதலீடு செய்து
அரசியலை ஒருவகைத் தொழிலாக்கி
லாபம் மட்டுமே ஈட்டப்படும் விந்தை

மானமதை பொம்மையாக்கி
அதனுடன் விளையாடிப் பார்க்க
பேராசைத் தீயிட்டுக் கொளுத்தி
சாம்பல் கண்டு ரசிக்கும் கூட்டங்கள்

முறைகள் தவறிய
சிந்தனைகளைப் பக்குவமாகக்
கையாளும் நெறிமுறைகள் கற்று
மனதை சமாதியாக்கிபடியே பலர்

எரிச்சலோடு விரைகிறேன்
கல்லாகிப் போன இறை தேடி
உலகம் இருந்தென்ன பயனென்று
கேட்டுவிட்டு மனநிறைவடைய..!!!

எழுதியவர் : புலமி (5-Jan-13, 12:07 am)
பார்வை : 118

மேலே