ஞானகுறத்தியும் காளி தன்மையும் :(பகுதி-2)

உன்னை புதுபிக்க புவியை அழித்த
முடனே - இப்புவி தன்னை தானே
புதுப்பிக்க தொடங்கி விட்டது !
உனது சந்ததியை காக்க
சரணடைந்து விடு -அல்லால்
புதுப்பித்தலில் வேரோடு நீ
அழிந்துவிடு !
சத்திய தாயின் கருணை எல்லாம்
கனலாய் மாற கண்டாய்
அவள் பொற்பதம் மீதினில்
பச்சை கம்பளம் போர்த்திங்கு
உனது பாவம் போக்கி
கொள்வாய் !
சரண்புக மறுக்கும் நரர்களை
நரகத்திடை தள்ள தறிகெட்டு
வா காளி !
மழையால் மகிழ்ச்சி கொள்ளும்
அற்ப மானிடா !
மாரியின் போக்கு மாறிய
போக்கை கண்ணால் கானடா
செயற்கை அறிவின் கழிவு உனக்கு
அழிவை ஆனதடா 1
கழிவு தடுத்து அறிவு துறைக்கு
ஆக்கம் சேரடா !
கனலை கக்கும் காளியின்
கண்களில் கருணை சேரடா !
என் சக்தியில் நீ ஒரு தூசி
என மானிடற்கெல்லாம்
புத்தி புகட்ட புயலான வா
காளி!
யோகம் மறந்தாச்சு உதித்த
தேகம் தடிச்சாச்சு
போகம் பெரிதாச்சு
செய்யும் பாவம் வலுத்தாச்சு
ஆயிரம் வேர் கொன்ற மருத்துவ
முறையெல்லாம் -சூழ்ச்சியால்
நலிந்து ,மடிந்து - ஆயிரம் பேர்
கொள்ளும் மருத்துவ முறையாவும்
பக்கத்தில் வந்தாச்சு !
பக்க விளைவும் உண்டாச்சு
ஐயோ காளி "மருந்தென
வேணாவாம்" என்ற குரலும்
குறையாச்சு !
உலகிற்கே தவ நெறி தந்த புண்ணிய
பூமி என்றெல்லாம்
புலம்பியதெண்ணாச்சு !
புதைந்து மண்ணாச்சோ அல்லது
எரிந்து கரியாச்சோ
சொல்லடி வெக்காளி தலை நிமிர்ந்து
வழிகாட்டும் உன் பாரதமகள் இங்கே
தலை குணிந்து நிற்க கண்டாய் 1
புத்தன் புகுத்திய விழிப்புணர்ச்சி
தன்னை என் பாரத
மண்ணுக்கு புகுத்த
பரிவோடு வா காளி !
பரிவோடு வா காளி
ஓம் ஓம் ஓம் ஓம்ஓம் ...........