premalathagunasekaran - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : premalathagunasekaran |
இடம் | : cuddalore |
பிறந்த தேதி | : 02-Sep-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 148 |
புள்ளி | : 55 |
வளையல்கள் கொஞ்சிப் பேசிய
என் கரங்களை
விலங்கிட்டு சிறைபடுதுகிறாய்
உன் காதல் விழிகளால்...!
கலைந்து சென்ற
என் கடந்த காலத்தை
உன் நினைவுகளே அழகூட்டுகின்றன
நேற்றிபொட்டாக...!
கண் முன்னே
கானல் நீராய் மறைந்து போகின்றன
உன்னோடு கை கோர்த்து கடந்து செல்ல நினைத்த
என் வாழ்நாட்கள்...!
வாழ்க்கை முழுதும்
உன் துணையாக ஆசைப்பட்டேன்..
நினைவுத் துளிகளை மட்டும்
என் துணை ஆக்கிவிட்டு
வெகு தூரம் சென்றுவிட்டாய்...!
உதிர்ந்து போன
என் காதலின்
கல்லறையாக
மாறத்தான்
நீ முதலில் உதித்தாயோ....
நாம் பேருந்தில்
அழுதுகொண்டு,
புத்தகப்பை கொண்டு,
சென்றதுண்டு
பள்ளி நாட்களில்..!
கவலை விட்டு,
கலகலப்பாய் சிரித்துவிட்டு,
கடந்ததுண்டு,
கல்லூரி நாட்களில்,
இன்பம் மறந்து,
வீடு துறந்து,
வெகுதுரம் போனதுண்டு
வேலை நாட்களில்.
"சாலையில்
விரட்டி பிடிக்கும் வேகம்,
விட்டு கொடுக்கும் விவேகம்,
நல்ல நட்பை கொடுத்த படிக்கட்டு கம்பி,
இனிய காதலை காட்டிய ஜன்னல் கண்ணாடி"
"பெண்களுக்கு தாராளமாய் இடஒதுகிடு கொடுக்கும் ஒரே ஒரு இடம்"
"படிக்காதவனுக்கும் சீட்டு கிடைக்கும்,
படித்தவனுக்கும் கிழித்து தான் கொடுக்கப்படும்"
என்றும் சமத்துவம் நிலவும் இந்த
-பேருந்து பயணம்
"அவள்
இன்னும்
என்னை மறக்கவில்லை .
நினைத்தால் தானே மறப்பதற்கு.....
அன்புள்ள அப்பாவுக்கு
குழந்தைகள் ஆசையை நிறைவேற்ற
அப்பாகளுக்கு சிறிதேனும் சிரமம்
இல்லாமல் இருந்ததில்லை,
இருந்தாலும் அப்பாக்கள்
அதை கஷ்டமாய்
நினைப்பதில்லை,
நீ கூட அப்படித்தானோ என் அப்பா ?
எப்பொழுதோ !
நான் கேட்ட
விலை அதிகமான
விளையாட்டு பொம்மையை,
வாங்கித்தர முடியாது
என மறுத்திருக்கலாமே ?
அல்லது
அதை வாங்கித்தர நீ
இரு இரவுகள்
உறக்கம் இல்லாமல்
உழைக்க வேண்டும்
என்பதையாவது சொல்லிருக்கலாமே,
என் சிரிப்பை பார்க்க அவ்வளவு ஆசையா ?
மற்றொருமுறை ,
நான் வாங்கிய
எட்டாவது மதிப்பெண்ணை பார்த்து,
எனக்கு முத்தமிட்டு,
முட்டாய் வாங்கி கொடுத்து,
பெருமை பேசினாயே ,