Idhayasagi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Idhayasagi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-May-2019
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  4

என் படைப்புகள்
Idhayasagi செய்திகள்
Idhayasagi - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2019 3:31 pm

வற்றிய ஏரியில்
கிடந்து உருண்டபோது
ஒட்டிய மணலில் ஊடுருவி
தாகம் தணித்த ரோமகால்களில்
சந்ததிகளை புதைத்து விட்டு...
விரல் இடுக்குகளில்
சிக்கிக்கொண்ட
நெளியும் புழுக்களை
விழுங்கவோ உதறவோ என
சூடேறும் சுரப்பிகளில்
சிறகுகள் நனைத்து வேகமெடுக்க...
பறக்காத நெகிழி புள்ளிகள்
பெரிதாக நெருங்கி வர
தொட்டுவிடுமுன் கடக்க
பெர்முடாவும் துப்பிவிட...
ஆகாயத்தில் முட்டி
எறியும் சிதையில் விழும்போது
வெடித்த பிண துண்டங்களை
அள்ளி தின்று கொண்டு இருக்க...
எறும்பொன்று கூறியது
'உன் பற்களையும் தின்று
நாக்கையும் விழுங்கும்முன்
தெறித்து கிடக்கும் எச்சிலை
நக்கி துடைத்து செல்' என்று!!!
--இதயசகி

மேலும்

Idhayasagi - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2019 3:15 pm

ஆசைக் கட்டுகளை
அடுக்கி வைத்த பரணில்
கால அகடூறியின் நாசம்

நிரம்பி வழிகிற கூட்டத்தில்
அவசர கால்களிடம்
தேடாதக் கருணை

நூலாம்படை நிழலாட்டத்தில்
வடித்துக் கொண்ட கதைகளிடம்
தோற்றிடும் பொம்மலாட்டங்கள்

அத்துமீறல் பொதுவாகியதால்
பல்லிக் குட்டிகளோடு கொஞ்சிடும்
தொடக்கமறியா தெருவோரத் தளிர்கள்

தோல் சுருக்கங்களுக்கிடையில்
தேடாமல் கிடைத்திடும்
தொலையாத புதுமைகள்

தீண்டாது அருகளிக்கும்
பூவரச மரத்தடியின்
நெளியும் அடை கம்பளிப் பூச்சிகள்

நிலவொளிக்காக காத்திருந்த
நான்கு கண்களின்
தீராத மௌன ஏக்கங்கள்

உதிராத ரோமங்களும் சிறகுகளும்
சுமையேற்றிடும் குப்பைகள்
தேங்குதலும் தேக்குதலும்
கனவுகளின் தற்கொலை குட்டைகள்

இப்படி

மேலும்

Idhayasagi - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2019 3:02 pm

மனிதனாகிய நான்...
பேரண்டத்தை படைத்து
தன்னையே செதுக்கிக் கொண்டவன்!
பாத ஈர்ப்பு விசையினால்
புவியை நிதானித்து சுழல செய்கிறவன்!
கண்ணசைவினால்
சூரிய சந்திரனை வடித்து ஒளிர்கிறவன்!
உமிழ் நீரால் கடல் செய்தவனுக்கு
தாகம் தணிக்க தண்ணீர் இல்லையா?
இயற்கையே...
பிதற்றுவதை நிறுத்து!
எனதாக்கத்தில் தொழிலாளி மட்டுமே நீ
அதிரவோ ஆர்ப்பரிக்கவோ தகிக்கவோ
பணிக்கப் படவில்லை நீ!

சாபமா?! எனக்கா?!
பனித்துளிகளை உறிஞ்சிவிட
சிலந்தி வலைகளோடும்
புல்வெளிகளோடும்
இரவு கழிக்கக் கிடப்பேனா?!
கீழ்மை புத்தியில்
சிசுக் குடத்தின் நீரையும் அருந்துவேனா?!

சேவக இயற்கையே...
உன் புலம்பல்கள்
இந்த மண்மேட்டின் எல்லை தாண்டாது
கேட்டுக் கொள்!
எனது

மேலும்

Idhayasagi - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2019 2:55 pm

கட்டாந்தரையின் சூடு துரத்த
கடலில் குதித்ததாக நினைத்து
அமிலக் குட்டையில் நொதிந்துருகி
தொலைத்துக் கொள்ள முடியாது
வளியோடு கதைக்கின்ற வலிகள்!

உருவமற்று திரிவதால்
உடைவதற்கும் அழுவதற்கும்
சாட்சிகளில்லா வெறுமையை
நிறைத்துக் கொண்டிருப்பது
உதிரக் கதறலின் மௌனங்களே!

சுருட்டி மறைத்த
அச்சங்களும் ஆசைகளும்
முனகலோடு கருகுவதில்
மரித்துக் கொண்டிருப்பது
காகிதமும் பேனா மையுமே!
--இதயசகி

மேலும்

Idhayasagi - Santhakumar அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

1.கவிதை தூய தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் .
2.கவிதை சொந்த படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் .

மேலும்

7 :
Yet Not Get This விரும்பும் தலைப்பு போட்டி Result. We Need Winner List and consolation prize S.Antony Lawrance 22-Jul-2019 10:52 am
7 :
காதலின் அரசியல் கலைஞர் கண்டெடுத்த கண்ணகி சிலை நீ... நிமிர்ந்த வள்ளுவன் சிலையின் பாதம் கூசும் கடல் அலை நான்... செழுமை தரும் இயற்கை என் காதல்... அதனை அழிக்கும் எட்டு வழி சாலை உன் காதல்... ஐப்பசி மழையாய் உன் மீது நான் பொழிந்த காதல் வீணாகிறது அணை இல்லா ஆறாய்... என் காதலை உன்னுள் சேர்த்து வைக்க ஆகிறேன்… கலி காலத்திலும் ஒரு கரி கரிகாலனாய்... என்னை முழுவதுமாக ஊழல் செய்தவளே... என்னிடம் இருந்து தப்பி ஓட நினைப்பவளே... காதலில் சிக்கி கொண்ட நான் மட்டும் கடனில் இருந்து தப்ப முடியாத விவசாயி ஆனேன்... எனை பார்த்தும் பார்க்காதது போல சாலையை பெருக்கும் அமைச்சராய் நடிக்கிறாய்… உனது அரசியல் தந்திரத்தை காட்டி கொடுத்தது உன் ஓரக் பார்வை... காவிரி நீராய் இழுபறி செய்யாதே விதைக்க காத்திருக்கும் விவசாயியாய் கண்ணீருடன் காத்துக் கொண்டிருக்கிறேன்... உன் ஒரு வார்த்தைக்காக... குழாய் அடி சண்டையென என் மனதில் ஆரவாரம் செய்து கொண்டிருப்பவளே… கீழே விழுந்த குடமாய் மனம் நொருங்குகின்றது... உன் ஓர இதழ் புன்னகையில்... திருடனுக்கே மாத்தி மாத்தி ஓட்டு போடுவதாய்… உனை குறை கூறிக்கொண்டே உனை மட்டுமே பின் தொடர்கிறது என் உலகம்... எனை மறந்த தேர்தல் வாக்குறுதி நீ தேர்தல் நேர ரொக்கம் நீ இலவச பொருட்களும் நீ கோடைகால மின் வெட்டு நீ மழைகால வடியாத வடிகால் நீ வாரிசு அரசியலும் நீ தாமதமாக கிடைக்கும் நீதி நீ கட்டப்படாத பாலம் நீ தினம் தினம் ஏமாந்து போகும் சாதாரண குடி மகன் நானடி... படைப்பு: செ.அந்தோணி லாரன்ஸ் அலைபேசி: 7401319412 இடம்: திருவொற்றியூர், சென்னை - 19 17-Jul-2019 10:03 am
மேலும்...
கருத்துகள்

மேலே