நாளைய நாம்

வற்றிய ஏரியில்
கிடந்து உருண்டபோது
ஒட்டிய மணலில் ஊடுருவி
தாகம் தணித்த ரோமகால்களில்
சந்ததிகளை புதைத்து விட்டு...
விரல் இடுக்குகளில்
சிக்கிக்கொண்ட
நெளியும் புழுக்களை
விழுங்கவோ உதறவோ என
சூடேறும் சுரப்பிகளில்
சிறகுகள் நனைத்து வேகமெடுக்க...
பறக்காத நெகிழி புள்ளிகள்
பெரிதாக நெருங்கி வர
தொட்டுவிடுமுன் கடக்க
பெர்முடாவும் துப்பிவிட...
ஆகாயத்தில் முட்டி
எறியும் சிதையில் விழும்போது
வெடித்த பிண துண்டங்களை
அள்ளி தின்று கொண்டு இருக்க...
எறும்பொன்று கூறியது
'உன் பற்களையும் தின்று
நாக்கையும் விழுங்கும்முன்
தெறித்து கிடக்கும் எச்சிலை
நக்கி துடைத்து செல்' என்று!!!
--இதயசகி

எழுதியவர் : இதயசகி (1-Jul-19, 3:31 pm)
சேர்த்தது : Idhayasagi
Tanglish : naalaiya naam
பார்வை : 155

மேலே