Nikhil - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Nikhil |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 0 |
கரையில்லாத தீவு ஒன்றில்
கரைந்து கொண்டிருக்கிறேன்
கனவல்ல......
சிறைப்பட்டு விட்டேன்
சிதைந்து தேடுகிறேன்
சிறையல்ல....
தொண்டை வறண்டு
துவண்டதில் வலிக்கிறது
நோயல்ல.....
உயிர்பிச்சை ஓலங்கள்
ரத்த வாசம் துளைக்கிறது
பேரிடர்கொல்ல.....
நகர முடியாது
திரும்ப முடியாது
மூச்சு முட்டுகிறது
பேச்சு வெட்டுகிறது
நிழல் வெளிச்சக்கீற்றில்
நினைவிழக்கையில்
ஓங்கியது
ஒரேயொரு எண்ணம்
பிழைப்புக்காய் வந்தவனை
பிழைக்க வைப்பாரோ?
பிழை செய்யும் இவர்தாம்
பிழைப்பாரோ?
காற்று வாடுகிறது
கேட்பாரற்று
கண்கள் மூடுகிறது
தனிமனித ரணங்களை
கேட்பதேயில்லை
இப்பணம் கூட்டும்
இழவூழ்
நடைபிணங்கள்
அடர்த்தியாக இருந்த பசுமையை இரண்டாகப் பிரித்தபடி,பாம்புபோல நீண்டு கிடந்த மலைப்பாதையில்,அந்த உயர் ரகக் கார் மலையின் உச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.கொண்டை ஊசி வளைவுகளிலும்,கொஞ்சம்கூட வேகத்தைக் குறைக்காமல் அநாயசமாகப் பறந்துகொண்டிருந்த அந்தக் காரினுள்,மூன்று இளைஞர்கள் இருப்பது தெரிந்தது.வனத்திற்குள் இருந்து வந்துகொண்டிருந்த விதவிதமான பறவைகள்,விலங்குகளின் சப்தம் எதையும் ஊன்றிக் கேட்கும் மனநிலையில் அவர்கள் இல்லை என்பது,காருக்குள் அதிர்ந்து கொண்டிருந்த இசையிலிருந்து தெரிந்தது.
“டேய்..மைக்கேல்..,இன்னும் கொஞ்ச தூரத்திலே வலதுபக்கம் ஒரு மண் ரோடு பிரியும்.அதிலே வண்டியைத் திருப்பிக்கோ..”,
ஜ
இல்லாத ஒன்றை
இருப்பதாகச் சொல்லி
கூச்சலிடலாமா....?
கவிதை கடலில்
கழிவு நீரை
கலக்க நினைக்கலாமா...?
பொய் மூட்டைக்குள்ளே
உண்மை சாட்டைதனை
அடைக்க முயலலாமா....?
இருளை கிழிக்கும்
வெளிச்சம் அதுவென
அறிய மறுக்கலாமா....?
பாலையெல்லாம்
சோலையாகுது - உன்
ஊனக் கண்ணாலே....!
சோலையெல்லாம்
பாலையாகுது - உன்
ஞானக் கண்ணாலே....!
சுவற்றில் யாரும்
பந்தை எறியலாம்...
எறிந்த பந்தை
பிடிக்கத் தெரியனும்...!
அறியாமை இருளில்
அகப்பட்டுக் கொண்டாய்
அறிவொளி ஏற்றவந்தால்
தனை நீயோ அறிவாளி என்கிறாய்....!
ஆத்திரக்காரனுக்கு
புத்தி மட்டு....!
சூத்திரம் கற்று
என்ன பயன்
என் செல்ல சிட்டு...
சங்கம் பலவாயினும்
அங்கம் வகித்த
தங்கத் தமிழே... !
நல்லோர் நாவிலும்
பொல்லார் நாவிலும்
அன்னை தமிழே... !
கவிஞனுக்கு காப்பாவாய்
கவிதைகளில் யாப்பாவாய்
அன்பு தமிழே... !
இலக்கணத்தில் பாக்களாவாய்
இலக்கியத்தில் தோப்புக்களாவாய்
செந்தமிழே.. !
சீராய் பலரையும்
சிறப்பாய் செதுக்கிய
சீர் தமிழே.. !
பூக்கள் மணம்போல
குணம் கொண்ட
என் தமிழே... !
வானளந்து வைத்தாலும்
வற்றாத எழுத்தின் ஊற்றே
தலைத் தமிழே... !
அணிகள் எல்லாம்
நீ அணியும் அணிகலன்களே
அருந் தமிழே... !
சொல்லும் நீயே
பொருளும் நீயே
பழந் தமிழே...
கலையும் நீயே
கவியும் நீயே
உயிர் தமிழே... !
மெய்ப