சுப்ரமண்ய செல்வா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுப்ரமண்ய செல்வா
இடம்:  கொழும்பு, இலங்கை
பிறந்த தேதி :  03-Sep-1963
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Aug-2018
பார்த்தவர்கள்:  130
புள்ளி:  28

என் படைப்புகள்
சுப்ரமண்ய செல்வா செய்திகள்
சுப்ரமண்ய செல்வா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2018 7:48 pm

இதோ! இன்றைய நாளின் நிறைவு நெருங்கிக்கொண்டிருக்கிறது.
எவ்விதம் கழிந்தது உனது நாள்?
நீ கடந்து செல்கையில் யாரேனும் களிப்படைந்தார்களா?
நீ நின்று பேசினாயென யாரேனும் நினைவில் கொண்டார்களா?
அன்பான சில வார்த்தைகள் உன்னைப்பற்றிச் சொல்ல
இங்கு யாரேனும் உள்ளார்களா?

உனது நண்பனுக்கு உற்சாக வணக்கம் சொன்னாயா? - அல்லது
கடமைக்கு கையசைத்து கடந்து போனாயா?
சுயநலமாய் விரைந்ததா இன்றைய நாள்? அல்லது
யாருடைய நெஞ்சமேனும் உன் செயலால்
நன்றியால் நனைந்ததா?

இன்றைய நாளை வீணாக்கினாயா? இழந்தாயா?
நலமாய் நகர்ந்ததா? கடிதாய் கடந்ததா?
கருணைத் தடம்விட்டு வந்தாயா? காய வடு விட்டு கடந்தாயா?

இன்றிரவு உறக்கம் நாடி உன்

மேலும்

சுப்ரமண்ய செல்வா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2018 7:39 pm

இலையுதிர்கால
எழில் வனமொன்றினில்
பிரிந்து நீண்டன
பாதைகள் இரண்டு

இரண்டிலும் ஒன்றாய்
பயணிக்க இயலா
பரிதவிப்பில் நான்
பார்த்து நின்றேன்
பாதை ஒன்றினை;
பார்வைக்கெட்டிய
புதர் நிறைந்த
வளைவுவரை.

பின்பு நான்
மறுபாதையினைத் தேர்ந்தேன்;
பாதங்கள் ஸ்பரிசிக்காத
பசும்புல் பாதையது.

அந்தக் காலை பொழுதினில்
சரிநிகராய் விரிந்தன
இருபாதைகளும்;
பாதங்கள் பட்டு சருகாகா
பச்சிலைப் பாதைகள் இரண்டு.

முன்னையப் பாதயினை
இன்னொரு நாளுக்கு
ஒதுக்கினேன்.
ஆயினும் நானறிவேன்
ஒருபாதையின் முடிவில்
வேறொரு பாதைத் தொடங்கும்
மாயப் பயணமிது.
இன்னொரு நாள் நான்
இவ்வழி வருவது ஐயமே.

யுகயுகங்களை கடந்து ஓர்நாளி

மேலும்

சுப்ரமண்ய செல்வா - சுப்ரமண்ய செல்வா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2018 6:03 pm

கடிகாரத்தை பரிசளிக்கும்
உன் சூசகம் அறிவேன்.

காலதாமதங்களுக்கு
கடிகாரமெனில்
என்
காலந்தவறாத வருகைகளுக்கு
பரிசாய்
என்ன தருவாய்

எனக்கான
உன் காத்திருப்பின்
இடைவெளியை
நிரப்பிக்கொண்டிருக்கும்
என் காதலை
கவனிக்கவில்லையா நீ

நீதானே சொல்வாய்
காத்திருத்தலில்
உயிர்த்திருக்கிறது
உன் காதலென்று

நிமிடங்களும் மணிகளும்
கால நெடுங்கணக்கின்
சிறு பின்னங்கள்

உன்னை அடைதலுக்கான
என் காத்திருப்பு
யுகங்கள் பல கடந்ததென்பதனை
அறிவாயா

ஆதலினால் காத்திரு.

- சுப்ரமண்ய செல்வா -

மேலும்

மிக்க நன்றி. 13-Sep-2018 7:27 pm
அறிந்தேன் அத்தனை சுகம் அருமை தோழரே பிழை மன்னிக்கவும் 10-Sep-2018 5:01 pm
காத்திருத்தலின் சுகம் க 10-Sep-2018 4:55 pm
சுப்ரமண்ய செல்வா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2018 6:03 pm

கடிகாரத்தை பரிசளிக்கும்
உன் சூசகம் அறிவேன்.

காலதாமதங்களுக்கு
கடிகாரமெனில்
என்
காலந்தவறாத வருகைகளுக்கு
பரிசாய்
என்ன தருவாய்

எனக்கான
உன் காத்திருப்பின்
இடைவெளியை
நிரப்பிக்கொண்டிருக்கும்
என் காதலை
கவனிக்கவில்லையா நீ

நீதானே சொல்வாய்
காத்திருத்தலில்
உயிர்த்திருக்கிறது
உன் காதலென்று

நிமிடங்களும் மணிகளும்
கால நெடுங்கணக்கின்
சிறு பின்னங்கள்

உன்னை அடைதலுக்கான
என் காத்திருப்பு
யுகங்கள் பல கடந்ததென்பதனை
அறிவாயா

ஆதலினால் காத்திரு.

- சுப்ரமண்ய செல்வா -

மேலும்

மிக்க நன்றி. 13-Sep-2018 7:27 pm
அறிந்தேன் அத்தனை சுகம் அருமை தோழரே பிழை மன்னிக்கவும் 10-Sep-2018 5:01 pm
காத்திருத்தலின் சுகம் க 10-Sep-2018 4:55 pm
சுப்ரமண்ய செல்வா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2018 7:56 pm

கைபிடித்தவனுடன்
நீ கையசைத்து
கடந்து சென்ற காட்சி
கடலடி பாறையாய்
கனத்துக்கிடக்கிறது

ஏனோ நீ
பள்ளிக்கூட வாசலில்
துள்ளிப் பிரியும்
நினைவு வந்து போகிறது
பள்ளியிலிருந்து தினமும்
இல்லம் திரும்புவாய்

விடுபட மறுத்த
உன் விரல்களை
வலிய பிரித்து
நடந்தபோது
உவகையும் வெறுமையும்
பெருமிதமும் பிரிதுயருமென
வித்தியாச அவஸ்தையில்
விம்மித் தணிகிறேன்

மகளே
கண்ணீர் கலந்த
என் பெருமூச்சு
சுமந்து வருகிறது
உனக்கான
வாழ்த்துகளையும்
பிரார்த்தனைகளையும்

- சுப்ரமண்ய செல்வா -

மேலும்

அருமை 06-Sep-2018 9:46 pm
சுப்ரமண்ய செல்வா - சுப்ரமண்ய செல்வா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2018 2:32 pm

மலரைக் கசக்கி
மகிழும் வக்கிரம்
மனிதருக்கு மட்டுமே

பிறகேன் எம்மை
வம்புக்கிழுக்கின்றீர்

எங்களில் எவரும்
தங்கள் பெண்டிரை
கூடியென்ன
தனியேயேனும்
சிதைப்பதில்லை

எனின்
மிருங்கங்கள் போலென
எங்ஙனம் உரைப்பீர்

ஆதலினால் இனி
குரூரத்திற்கு உவமையாய்
மனிதரைக் கொள்வதென
மாக்கள் கூடி
முடிவு செய்தோம்

- சுப்ரமண்ய செல்வா -

மேலும்

நன்றி. 02-Sep-2018 8:11 pm
உண்மை,அருமை 02-Sep-2018 6:28 pm
சுப்ரமண்ய செல்வா - சுப்ரமண்ய செல்வா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2018 5:03 pm

அரிசி புடைத்து
சோறாக்கிய
அப்பத்தாவோடு
பறந்துவிட்டன
சிட்டுக்குருவிகளும்
- சுப்ரமண்ய செல்வா -

மேலும்

நன்றி 02-Sep-2018 1:49 pm
நன்றி 02-Sep-2018 1:46 pm
அருமை 02-Sep-2018 12:11 pm
அருமை 02-Sep-2018 8:13 am
சுப்ரமண்ய செல்வா - சுப்ரமண்ய செல்வா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2018 7:34 pm

ஒரு கவிதையைப் போலிருக்கிறாய்
புரிந்தும் புரியாமலும்
ஒவ்வொரு வாசிப்பின் முடிவிலும்
வெவ்வேறு அர்த்தமாகிறாய்
உன்மொழி கற்றுத்தா
ஒரு பொழிப்புரையெழுத

நம் மௌனங்கள் பரிமாறிக்கொள்ளும்
பரிபாஷையே போதுமானது
வார்த்தைகள் தேடிக் களைக்கும்
நம் சம்பாஷணைகளுக்கு
மௌனமே அடைக்கலமளிக்கிறது

பெருமழையில் கலைந்துபோகும்
மண்குவியலைப்போல்
உன்னில் கரைந்துபோக
வேட்கை கொள்கிறேன்
உன்னிசைவை ஒருமுறை சொல்
உன்னீர்ப்பு விசையில்
என்னைத் தொலைக்கிறேன்.

அருகில் செல்கையில் விலகிச்செல்லும்
கானலைப்போல் மாயமாகிறாய்
ஒரேயொரு முறை உன் காதலை மொழிந்து செல்
நீ மீண்டும் தோன்றும் கணம் வரை
உயிர்த்திருக்க

- சுப்ரமண்ய செ

மேலும்

மிக்க நன்றி. 31-Aug-2018 6:58 pm
மிக்க நன்றி. 31-Aug-2018 6:55 pm
மிக்க நன்றி. 31-Aug-2018 6:53 pm
நாங்களும் காத்திருக்கிறோம் - அருமை 31-Aug-2018 5:53 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவர் பின்தொடர்பவர்கள் (1)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவரை பின்தொடர்பவர்கள் (1)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
மேலே