கானகத் தீர்மானம்

மலரைக் கசக்கி
மகிழும் வக்கிரம்
மனிதருக்கு மட்டுமே

பிறகேன் எம்மை
வம்புக்கிழுக்கின்றீர்

எங்களில் எவரும்
தங்கள் பெண்டிரை
கூடியென்ன
தனியேயேனும்
சிதைப்பதில்லை

எனின்
மிருங்கங்கள் போலென
எங்ஙனம் உரைப்பீர்

ஆதலினால் இனி
குரூரத்திற்கு உவமையாய்
மனிதரைக் கொள்வதென
மாக்கள் கூடி
முடிவு செய்தோம்

- சுப்ரமண்ய செல்வா -

எழுதியவர் : சுப்ரமண்ய செல்வா (2-Sep-18, 2:32 pm)
சேர்த்தது : சுப்ரமண்ய செல்வா
பார்வை : 68

மேலே