வினோத் குமார் ஏ - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வினோத் குமார் ஏ |
இடம் | : ப.புதூர் |
பிறந்த தேதி | : 19-Jul-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 76 |
புள்ளி | : 6 |
பலவீனத்தை அறி... பலம் பெறுவாய்!
இருளுக்குப் பகையானான்
பூமிக்கு விடியலானான்
ஒரே நேரத்தில் இரு முகமாய்
அதிகாலைச் சூரியன்!
ரம்மியமான மலைப் பிரதேசத்தின் குளிர்ந்த காற்றும்
நெஞ்சை கொள்ளை கொள்ளும் ராஜாவின் இசையும்
தெரு முனையும் திரும்பிப் பார்க்கும்
ஆத்தாவின் கைமணமும்
விழிகளுக்கு விருந்தளிக்கும்
சோலைவனப் பூக்களும்
கிரக்கத்தைத் தூண்டும்
அந்திமல்லியின் வாசமும்
செவியுணர்வை அற்றுப் போகவைக்கும்
ஜேசுதாசின் கானங்களும்
ஐம்புலன்களையும் ஆட்டி வைக்கும்
காதலியின் நினைவும்
எனக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த நண்பர்களும்
குதித்து கும்மாளமிட்ட
மாற்றான் வீட்டுக் கிணறும்
என்னை நகராது அமரவைத்த
புத்தகங்களும்
என்னை அடிமை கொள்ளவில்லை.!
என்னவளின் கண்களால் கூட என்னை கட்டுப் படுத்ததான் இயன்றதே தவிர
அடிம
திறந்து தேடினான்
தொலைந்து போனான்
"புத்தகம்"...!
கதவைத் திறந்தால்
வாழ்க்கையைக் காட்டுகிறது
புத்தக சாளரம்....!
வாங்கியவனுக்கு தெரியவில்லை
கறையானுக்கு தெரிகிறது
புத்தக ருசி....!
கன்னித்திரை திறவாமல்
செல்லரித்துப் போகும் தேகம்
வாசிக்கப்படாத புத்தகம்....!
ஆயிரம் சூரியன்கள்
அழகாய் அடுக்கப்பட்டுள்ளன
நூலக அலமாரி....!
ஒவ்வொரு தோண்டலிலும்
புதையல் தருகிறது
புத்தகம்....!
பெரியாரும் பிள்ளையாரும்
முத்தமிட்டுக் கொள்கிறார்கள்
புத்தக அலமாரியில்...!
பிரசவிக்குமுன்னே
இறந்து விடுகிறது
சில கற்பனைகள்....!
பெரு வெளிச்சத்தில்
சிறு இருள் தேடுகிறான்
புது எழுத்தாளன்...!
அமைதி
இதயம் இத்தனை வேகமாய்த்
துடிக்கு மென் றறியேன்
அழகே...
உன்னிடம் பேச
எத்தனிக்கும் முன்பு வரை!
உன்னை விரும்பிய மனம்
விரும்புதடி
உன்னை மறப்பதற்கு.....
உன்னை மறக்கின்ற நினைவும் துடிக்குதடி உன்னை நினைப்பதற்கு!
உன்னை விரும்பிய மனம்
விரும்புதடி
உன்னை மறப்பதற்கு.....
உன்னை மறக்கின்ற நினைவும் துடிக்குதடி உன்னை நினைப்பதற்கு!
காலம் விசித்திரமான கற்பனையில் ...
பிறப்பிலே எவன் கண்டான் சாதியினை
ஆராய்ந்துக் கூறியதுண்டா ஆதாம் ஏவாளை
இச்சாதி இம்மதமென இயம்பிடவும் இயலுமா
கற்பனையில் மிதக்கிறது கருத்துக்கள் இங்கே !
விழிகளில் தெரிகிறதே
சாதிவெறி எரிகிறதே !
அறிவுள்ள அறிவிலியும்
அறைகூவல் விடுவதேனோ !
இருவேடத்தால் இருநிலையும்
இதயத்தில் கொள்வதேனோ !
மதிகெட்டு வணங்குகிறார் முழுமதியை
மதியுள்ளவன் கால்பதித்து ஆய்கிறான் !
சாதிமதமென வேற்றுமை காண்போர்
சந்திரமண்டலம் சென்றும் பிரிந்திடுவார்
சாதிக்கொரு கட்சியும் தொடங்கிடுவார் !
மதம்பிடித்து அலைகிறார் மதமென்று
பித்தர்களாய் பிதற்றுகிறார் பிரிவென்று !
சுகம்கா
பாதவேர்கள் பூத்துவிட்டது..
விழியில் புன்னைகைமொட்டுகள் காத்திருக்கின்றது
அவள் வரவிற்காக….!
அவள் பெயரைக்
கோர்க்கும் எழுத்துக்களிலும் ஒட்டிக்கொள்கிறது
அழகான கர்வம்..!
சாமானியர்களின் வெள்ளை உதிரங்கள்
கோமானியர்களின் செருப்பில் வைரங்களாய்...
கறுப்புப் பணம்..!
எரிப்பவனைப் பார்த்து
தின்பவன் சொல்கின்றான்
நீச்சனென்று..!
முத்தமிட்ட நொடியில்
என் விழியும் அவள் விழியும் பார்வையாலே
முத்தமிட்டுக்கொண்ட நொடியிலே
நான்கு விழிகள் அங்கே சத்தமின்றியே
புது காதல் அத்தியாயம் வரைய தொடங்கியதே....
என் சுவாசத்தோடு அவள் மூச்சுக்காற்று
முத்தமிட்டுக்கொண்ட நொடியிலே
இரு உயிர்கள் ஒரு உயிராகி
இருவர் சுவாசங்களும் காதல் வானிலையில்
நேசமாய் வாசம் வீசியதே....
அவள் கன்னத்தில் என் உதடுகள் காதல்
முத்திரை பதித்த நொடியிலே
என் உதடுகள் உதட்டுச்சாயமின்றியே
அவள் கன்னச்சிவப்பால் உதிரத்தின்
நிறமாக உருமாறிப்போனதே.....
என் இதழ்கள் அவள் இதழோடு
முத்தமிட்டுக் கொண்ட நொடியிலே
இவ் அகிலம் முழுதாய் நான் மறந்தே
எனையே முழுதாய் நா