அடிமை
ரம்மியமான மலைப் பிரதேசத்தின் குளிர்ந்த காற்றும்
நெஞ்சை கொள்ளை கொள்ளும் ராஜாவின் இசையும்
தெரு முனையும் திரும்பிப் பார்க்கும்
ஆத்தாவின் கைமணமும்
விழிகளுக்கு விருந்தளிக்கும்
சோலைவனப் பூக்களும்
கிரக்கத்தைத் தூண்டும்
அந்திமல்லியின் வாசமும்
செவியுணர்வை அற்றுப் போகவைக்கும்
ஜேசுதாசின் கானங்களும்
ஐம்புலன்களையும் ஆட்டி வைக்கும்
காதலியின் நினைவும்
எனக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த நண்பர்களும்
குதித்து கும்மாளமிட்ட
மாற்றான் வீட்டுக் கிணறும்
என்னை நகராது அமரவைத்த
புத்தகங்களும்
என்னை அடிமை கொள்ளவில்லை.!
என்னவளின் கண்களால் கூட என்னை கட்டுப் படுத்ததான் இயன்றதே தவிர
அடிமைப் படுத்த வியலவில்லை.!
உன்னால் மட்டும் என் நாவினை
அடிமை கொள்ள எவ்வாறியன்றது?
என தருமை புளிச்சைக் கீரையே!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
