its me - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : its me |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 0 |
நிலா இன்றி
வானம்
இருந்திருக்கின்றது.........!
வானம் இன்றி
நிலா
இருந்ததில்லை................!
வானின்றி தானிருக்க
யாரைத்தான் தேடுகின்றது
இந்த நிலா.......!
நான் வளர்த்த
செடியில்
நீ பறித்த
ரோஜா நலமா..........?
-பிரிதலில் காதல்
கவிதைதீவுக்குள்
காட்டுத் தீ பரவியதால்
கற்பனை சுவடுகள்
கருகி விட்டன......!
என் விழி வாசலில்
விளக்கேற்றி வைத்த
சுவடுகளை என் விழி நீர்
வழிந்து விழுங்கி விட்டது.........!
பால் நிலா தவழ்ந்த
சுவடு பகல் பொழுதில்
மறைந்துவிட்டது..........!
கடற் கரையில்
உன் பாத சுவடு
கடல் அலையால்
கரைக்கப்பட்டது..........!
துள்ளி திரிந்த
கால சுவடு
துளிர் விட்டு வளர்கிறது
துடிக்கும் இதயத்தில்..........!
உயிரற்ற உன் உருவம்
உயிரோட்டமாக காட்சியளிக்கிறது
புகை படத்தில்.....!
இதில்...........
நீ பதித்த சுவடுகள்
மறைந்துள்ளன.......!
பட்டாம் பூச்சியின்
சிறகுகள் அழகு......!
பட்டுப் புழுவின்
வண்ணம் அழகு...!
பறக்கும் பறவையின்
அலகுகள் அழகு.....!
பாடும் குயிலின்
கீதம் அழகு.....!
வீசும் தென்றலின்
வேகம் அழகு.....!
வானம் தூவும்
பனி அழகு......!
மேகம் தூவும்
மழை அழகு.....!
பிஞ்சு வயது
பாதம் அழகு......!
நடை வயது
நாய்க்குட்டி அழகு.......!
இளவயது
காதல் அழகு....!
முதிர் வயது
நரை அழகு.......!
சேரும் வயது
சொர்க்கம் அழகு....!
வேலியோர
கள்ளி அழகு....!
வேண்டாத
வெயில் அழகு .......!
வேண்டுகின்ற
நிழல் அழகு..........!
கொட்டுகின்ற
அருவி அழகு......!
தாவுகின்ற
குரங்கு கூட
ஆயிரம் முறை
திருத்துகிறேன்
என்காதலை........!
அவளின் திருத்தாத
புருவங்களுக்கு
இணையாக.......!
முடியவில்லை........................
பிழையே இல்லாத
திருத்தங்களில்...
சிக்கித்தவிக்கிறது
என் காதல்...!
எவரிடமும் வாதிடமுடியா
சொல்லி பகிரமுடியா
பின்னிக் குமையும்
எண்ண சிக்கல்களை
நீ இல்லா இரவுகளில்
உன் நீங்கா நினைவுகளுடன்
பகிர்ந்து கொள்கிறேன்......!
இரவுகள் வெளுத்த பின்னும்...........
மோகத்திமிரில் மீட்டிய
ராகங்களும்......
மௌன புன்னகையில்
பேசிய பாசைகளும்......
செங்காந்தள் பூவிதல்களில்
பருகிய தேனும்......
உயிர் குடிக்கின்றன.......
இரவுகள் வெளுத்த பின்னும்................
எழுதப்படாத விதியில்
சொல்ல படாத
உன் மரணம்........!
தொடரும் சாபங்களால்
தீர்க்கப்படாத தீர்மானங்கள்....!
நான்......
நிதானித்து எழும்
வேளைகளில்.........
என் கண்முன்னே
உன் மாறாப்புன்னகைக
அவள் சூடிய
ரோஜா பூவின்
ஓர் இதழ் எடுத்து
தடிமனான புத்தகத்திற்குள்
பதுக்கி வைப்பது
அலாதியானது..............!
தீர்ந்து போன
குவளை நீரின்
கடைசி சொட்டில்
விரல் நனைத்து
அவள் பெயர்
எழுதுவது சுகமானது......!
ஒற்றை பாகையளவில்
ஓரக்கண்ணால்
அவள் பார்ப்பதை
கண்களால் படம் பிடித்து
இதய அறைகளில்
மாட்டிவைப்பது
நிலையானது.................!
வினாத்தாளை பார்த்ததும்
மறந்து போகும்
விடைகளை போல
அவள் கண்கள்
பார்த்ததும் என்னை
மறப்பது இயல்பானது........!
அவளின் அதட்டல்
நடு நிசி கனவு
வரை நீள்வது
வரமானது........!
வழிதவறிய மானாக
அவள் நிழல்
என் மார்போடு
வந்து மோதுவது